கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களும் சேவைகளும்

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் தீங்கு விளைவிக்கும் சாத்தியமான செயல்பாடுகளைத் தடுக்கவும், எங்கள் தளங்களில் சில பொருட்கள் மற்றும் சேவைகளை தனிநபர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ரீடெய்லர்கள் வாங்கவோ, விற்கவோ, குலுக்கல் பரிசாக வழங்கவோ, பரிசளிக்கவோ, பரிமாற்றவோ, வர்த்தகம் செய்யவோ மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடை விதித்துள்ளோம். கீழே உள்ள எங்கள் கொள்கைகளில் கூறப்பட்டுள்ளவாறு தீங்கு விளைவிக்கும் உபயோகத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஏதேனும் மருந்துகளை எக்ஸ்சேஞ்ச் அல்லது விற்பனை செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் சேவைகளுக்கு வெளியே துப்பாக்கிகள், மது மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடை வைத்துள்ள மற்றும் ஆன்லைன் ரீடெய்லர்கள் விளம்பரப்படுத்தக்கூடும்; எனினும், குறைந்த வயதுடையவர்களுக்கு இந்த படைப்பு காட்டப்படுவதைத் தடைசெய்துள்ளோம். கடைகளிலோ ஆன்லைன் ரீடெய்லர்கள் மூலமோ இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பற்றிய விவாதங்கள், இந்தக் கொள்கையில் கூறப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஓழுங்குமுறைகளில் செய்த மாற்றங்கள் தொடர்பான வாதாடுதல், மருத்துவச் சிகிச்சை சூழலில் மருந்துகளின் உபயோகத்திற்காகவோ அது தொடர்பாகவோ வாதாடுதல் (உடல் அல்லது மன ரீதியான பக்க விளைவுகள் தொடர்பான உரையாடல் உட்பட) ஆகியவற்றை அனுமதிக்கிறோம்.
கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களிலும் சேவைகளிலும் பின்வரும் வகைகள் உள்ளன:
  • போதைப் பொருட்கள் மற்றும் மருந்துகள்
  • ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது வெடிபொருட்கள்
  • புகையிலை மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள்
  • மது
  • ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
  • ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேம்கள்
  • அழிந்துவரும் உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் (வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள்)
  • வரலாற்று கலைப்பொருட்கள்
  • தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் மற்றும் மெட்டீரியல்கள்
  • உடலுறுப்புகள் மற்றும் திரவங்கள்
ஒவ்வொரு வகையும் கீழே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
போதைப் பொருட்கள் மற்றும் மருந்துகள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
அதிக ஆபத்துள்ள மருந்துகள் (தவறாகப் பயன்படுத்துவது, அடிமையாவது ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்புள்ள அல்லது மோசமான உடல் ஆபத்துகளுடன் தொடர்புடைய மருந்துகள், ஓவர்டோஸ் எடுத்துக் கொள்வதும் இதில் அடங்கும்; எ.கா: கொக்கைன், ஃபென்டனல், ஹெராயின்).
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • அதிக ஆபத்துள்ள மருந்துகளை வாங்க, விற்க, வர்த்தகம் செய்ய, வர்த்தகம் செய்வதை ஒருங்கிணைக்க, நன்கொடையளிக்க, பரிசளிக்க அல்லது வேண்டுமென கேட்கும் முயற்சிகள்.
  • அதிக ஆபத்துள்ள மருந்துப் பொருட்களை அதுகுறித்த உள்ளடக்கம் இருக்கும் போஸ்டரின் மூலம் அவர்களாகவோ மற்றவர்கள் மூலமோ வாங்கியதாக, வர்த்தகம் செய்ததாக அல்லது வர்த்தகத்தை ஒருங்கிணைத்ததாக ஒப்புக்கொள்ளுதல்.
  • குணமடைவது, சிகிச்சை செய்வது அல்லது பிற பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கான உதவி போன்ற எந்தக் குறிப்பும் இல்லாமல் தனிப்பட்ட உபயோகத்திற்குப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொள்ளுதல். இந்த உள்ளடக்கம் அதிக ஆபத்துள்ள மருந்துப் பொருட்களைத் தயாரிப்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு சாதகமாக பேசவோ, பயன்படுத்துவதை ஊக்குவிக்கவோ, ஒருங்கிணைக்கவோ அல்லது வழிமுறைகளை வழங்கவோ கூடாது.
  • அதிக ஆபத்துள்ள மருந்துப் பொருட்களை ஒருங்கிணைத்தல் அல்லது ஊக்குவித்தல் (அதாவது அதைப் பற்றி நேர்மறையாகப் பேசுவது, அதன் உபயோகத்தை ஊக்குவிப்பது அல்லது அதைப் பயன்படுத்த அல்லது உருவாக்குவதற்கான வழிமுறைகளை வழங்குவது).
  • கவனத்திற்கு: அதிக ஆபத்துள்ள மருந்துப் பொருட்களைப் பற்றி விவாதிப்பது அல்லது அதற்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அவற்றின் அறிவியல்ரீதியான அல்லது மருத்துவச் சிறப்புகளை விவாதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகள் மற்றும் பொதுச் சேவை அறிவிப்புகள் அடங்கும்.
மருத்துவர் பரிந்துரை அல்லாத மருந்துகள் (உள்ளார்ந்த மருத்துவ நோக்கமற்ற அல்லது உச்சக்கட்டம் அடைய பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது மருந்துப் பொருட்கள் - இதில் இந்த மருந்துகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் மூல வேதிப்பொருட்கள் அல்லது மருந்துப் பொருட்கள் அடங்கும்.)
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • பரிந்துரைக்கப்படாத மருந்துகளை வாங்க, விற்க, வர்த்தகம் செய்ய, ஒருங்கிணைந்து வர்த்தகம் செய்ய, நன்கொடையளிக்க, பரிசளிக்க அல்லது வேண்டுமென கேட்கும் முயற்சிகள்.
  • பரிந்துரைக்கப்படாத மருந்துகளை, அதுகுறித்த உள்ளடக்கம் இருக்கும் போஸ்டரின் மூலம் அவர்களாகவோ மற்றவர்கள் மூலமோ வாங்கியதாக, வர்த்தகம் செய்ததாக அல்லது வர்த்தகத்தை ஒருங்கிணைத்ததாக ஒப்புக்கொள்ளுதல்.
  • குணமடைவது, சிகிச்சை செய்வது அல்லது பிற பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கான உதவி போன்ற எந்தக் குறிப்பும் இல்லாமல் தனிப்பட்ட உபயோகத்திற்குப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொள்ளுதல். இந்த உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் தயாரிப்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு சாதகமாக பேசவோ, பயன்படுத்துவதை ஊக்குவிக்கவோ, ஒருங்கிணைக்கவோ அல்லது வழிமுறைகளை வழங்கவோ கூடாது.
  • மருத்துவம் சாராத மருந்துப் பொருட்களை ஒருங்கிணைத்தல் அல்லது ஊக்குவித்தல் (அதாவது அதைப் பற்றி நேர்மறையாகப் பேசுவது, அதன் உபயோகத்தை ஊக்குவிப்பது அல்லது அதைப் பயன்படுத்த அல்லது உருவாக்குவதற்கான வழிமுறைகளை வழங்குவது).
  • மருத்துவம் சாராத மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய அல்லது ஊக்குவிக்க முயலுதல்.
  • மருத்துவம் சாராத மருந்துப் பொருட்களைக் காட்டும் விற்பனைப் பொருட்களைக் கொண்டிருத்தல்.
மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகள் (மருத்துவர் பரிந்துரை அல்லது மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பு தேவைப்படும் மருந்துகள்)
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • பின்வரும் சூழல்களைத் தவிர, பிற சூழல்களில் மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ முயலுதல்:
    • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோது தெளிவாகத் தெரிந்துகொள்ளுதல் அல்லது விவாதம் தொடர்பான சூழல்களில் தடுப்பூசிகளின் விலையை விளம்பரப்படுத்துதல்.
    • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோது சட்டப்பூர்வமான உடல்நலப் பராமரிப்பு மின் வர்த்தக பிசினஸ்கள் பதிவிடும்போது டெலிவரி வழங்குதல். இந்தப் பகிர்வில் உரிமம் பெற்ற சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு அல்லது சரியான மருந்துச் சீட்டைப் பெறுமாறு பொறுப்புத்துறப்பைச் சேர்ப்பதும் அடங்கும்.
  • பொருளாதார, உடல்நல, சமூக அல்லது இயற்கை பேரிடர் நெருக்கடி ஏற்படும் சூழல் தவிர, பிற சூழல்களில் மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளை நன்கொடையாக அல்லது பரிசாக வழங்க முயலுதல்.
  • மருத்துவச் சூழலில் மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளின் குறைந்த விலை, கிடைக்கும்தன்மை அல்லது செயல்திறனைப் பற்றி விவாதிக்கும் படைப்பு தவிர, மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளைக் கேட்டல்.
  • கவனத்திற்கு: மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளைப் பற்றி விவாதிப்பது அல்லது அதற்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அவற்றின் அறிவியல்ரீதியான அல்லது மருத்துவச் சிறப்புகளை விவாதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகள் மற்றும் பொதுச் சேவை அறிவிப்புகள் அடங்கும்.
என்தியோஜென்கள்
  • என்தியோஜென்களை வாங்கவோ, விற்கவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ கேட்கவோ முயலும் படைப்புகள்.
  • கவனத்திற்கு: என்தியோஜென்களின் சட்டமுறைமையை விவாதிப்பது அல்லது அதற்கு ஆதரவாகப் பேசுவது அல்லது அறிவியல்ரீதியான அல்லது மருத்துவச் சிறப்புகளை விவாதிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் கஞ்சாவில் இருந்து பெறப்படும் பொருட்கள்
  • கஞ்சா மற்றும் THC அல்லது மூளையைப் பாதிக்கும் அது தொடர்புடையவற்றைக் கொண்டிருக்கும் பொருட்களை வாங்கவோ, விற்கவோ, வர்த்தகம் செய்யவோ நன்கொடை அளிக்கவோ, பரிசு அளிக்கவோ கேட்கவோ முயலும் படைப்புகள்.
பின்வருபவற்றை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
என்தியோஜென்கள்
  • என்தியோஜென்களின் தனிப்பட்ட பயன்பாட்டை ஒப்புக்கொள்வது, அதைப் பயன்படுத்துவதை ஒருங்கிணைப்பது அல்லது விளம்பரப்படுத்துவது (அதாவது அதைப் பற்றி நல்ல விதமாகக் கூறுவது) அல்லது ஊக்குவிப்பதைக் காட்டும் உள்ளடக்கம்.
    • மேற்கூறியவை அனைத்தும் கற்பனை அல்லது ஆவண நோக்கத்திற்காக வழங்கப்பட்டிருந்தால் தவிர்த்து, பிற சூழல்கள்.
கஞ்சா மற்றும் கஞ்சாவில் இருந்து பெறப்படும் பொருட்கள்
  • கஞ்சா மற்றும் THC அல்லது மூளையைப் பாதிக்கும் அது தொடர்புடையவற்றைக் கொண்டிருக்கும் பொருட்களை ஒருங்கிணைக்கும் அல்லது ஊக்குவிக்கும் படைப்புகள் (அதாவது அதைப் பற்றி நேர்மறையாகப் பேசுவது, அதன் உபயோகத்தை ஊக்குவிப்பது அல்லது அதைப் பயன்படுத்த/உருவாக்குவதற்கான வழிமுறைகளை வழங்குவது).
  • கஞ்சா மற்றும் THC அல்லது மூளையைப் பாதிக்கும் அது தொடர்புடையவற்றைக் கொண்டிருக்கும் பொருட்களை வாங்கவோ விற்பனை செய்யவோ வர்த்தகம் செய்யவோ முயற்சி செய்யாத கஞ்சா மருந்தகங்கள் பதிவிடும் பிசினஸ் தொடர்புடைய படைப்புகள்.
  • உட்கொள்ளக்கூடிய கன்னபிடியோல் (CBD) அல்லது அதுபோன்ற கன்னபிடியோல் பொருட்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடை அளிக்கவோ, பரிசளிக்கவோ கேட்கவோ முயலும் பகிர்வுகள்.
  • உட்கொள்ள முடியாத கன்னபிடியோல் (CBD) அல்லது அதுபோன்ற கன்னபிடியோல் பொருட்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடை அளிக்கவோ, பரிசளிக்கவோ கேட்கவோ முயலும் பகிர்வுகள்.
  • உட்கொள்ள முடியாத கன்னபிடியோல் (CBD) அல்லது அதுபோன்ற கன்னபிடியோல் பொருட்கள் தொடர்பான நோய் கூற்றுகளை மேற்கொள்ளும் பகிர்வுகள்.
  • கஞ்சாப் பொருட்களைக் காட்டும் படைப்புகள்
மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகள்
  • சட்டப்பூர்வமான உடல்நலப் பராமரிப்பு மின் வர்த்தக பிசினஸ்கள் பதிவிடுவது உட்பட எந்தவொரு சூழலிலும் மருந்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளை வாங்கவோ விற்பனை செய்யவோ வர்த்தகம் செய்யவோ முயலும் படைப்புகள்.
  • மருத்துவர் பரிந்துரை தேவையில்லாத மருந்துகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ முயலும் படைப்புகள்.
  • மருத்துவர் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளின் சேர்க்கை அல்லது பயன்பாடு அடங்கிய படைப்புகள்.
ஆயுதங்கள், தோட்டாக்கள் அல்லது வெடிபொருட்கள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • பின்வரும் சூழல்கள் தவிர்த்து மற்ற சூழல்களில் துப்பாக்கிகள், துப்பாக்கியின் பாகங்கள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் அல்லது அபாயகரமான ஆயுதங்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ முயலுதல்:
    • ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள், பிராண்டுகள் அல்லது அரசாங்க ஏஜென்சிகள் (எ.கா. காவல்துறை, தீயணைப்புத் துறை) உள்ளிட்ட சட்டபூர்வமான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் பதிவிடுதல் அல்லது சட்டப்பூர்வமான அமைப்புகளின் சார்பாகப் படைப்புகளைத் தனிநபர் பகிர்தல்; மற்றும் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி இருத்தல்.
  • பின்வரும் சூழல்களில் பதிவிடுவதைத் தவிர்த்து மற்ற சூழல்களில் துப்பாக்கிகள், துப்பாக்கியின் பாகங்கள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் அல்லது அபாயகரமான ஆயுதங்களை நன்கொடையாகவோ பரிசாகவோ அளிக்க முயல்தல்:
    • ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள், பிராண்டுகள் அல்லது அரசாங்க ஏஜென்சிகள் (எ.கா. காவல்துறை, தீயணைப்புத் துறை) உள்ளிட்ட சட்டபூர்வமான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் மூலம் துப்பாக்கிகள் அல்லது தோட்டாக்களை நன்கொடையளித்தல், வர்த்தகம் செய்தல் அல்லது திருப்பி வாங்குதல் அல்லது சட்டப்பூர்வமான அமைப்புகளின் சார்பாகப் படைப்புகளைத் தனிநபர் பகிர்தல்; மற்றும் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி இருத்தல்.
    • ரீடெய்ல் பிசினஸ்கள், அரசு சார் அமைப்புகள் அல்லது இலாப நோக்கற்ற அமைப்புகள் அல்லது சட்டபூர்வமான அமைப்புகள் சார்ந்த அல்லது அவை ஸ்பான்சர் செய்த தனிநபர்கள் உட்பட, சட்டபூர்வமான அமைப்புகளால் துப்பாக்கிகள் ஏலமிடப்படுதல் அல்லது பரிசாக வழங்கப்படுதல்; மற்றும் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி இருத்தல்.
  • துப்பாக்கிகள், துப்பாக்கியின் பாகங்கள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் அல்லது அபாயகரமான ஆயுதங்கள் வேண்டுமென்று கேட்டல்.
  • சூழல் எதுவாக இருந்தாலும் பதிவிடுபவர் யாராக இருந்தாலும், துப்பாக்கிகள் அல்லது துப்பாக்கியின் பாகங்கள் தொடர்பான 3D பிரிண்ட்டிங் அல்லது அவற்றைக் கணினி மூலம் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை வாங்க, விற்க, பரிசளிக்க, எக்ஸ்சேஞ்ச் செய்ய, டிரான்ஸ்ஃபர் செய்ய, ஒருங்கிணைக்க, அவற்றைப் பற்றி நல்ல விதமாகப் பேச, அவற்றின் உபயோகத்தை ஊக்குவிக்க அல்லது அவற்றுக்கான அணுகலை வழங்க முயல்தல்.
  • இயந்திரத் துப்பாக்கி கன்வெர்ஷன் சாதனங்களை வாங்க, விற்க, வர்த்தகம் செய்ய, நன்கொடையளிக்க, பரிசளிக்க, கேட்க அல்லது சொந்தமாக வைத்திருப்பதாகக் கூற முயல்தல்.
பின்வரும் படைப்புகளை 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
ஆயுதங்கள், தோட்டாக்கள் அல்லது வெடிபொருட்கள்
  • துப்பாக்கிகள், துப்பாக்கியின் பாகங்கள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் அல்லது அபாயகரமான ஆயுதங்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடை அளிக்கவோ பரிசளிக்கவோ கேட்கவோ முயலும் (ஏலமிடுவதும், பரிசுச் சீட்டு குலுக்குவதும் இதில் அடங்கும்) ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள், பிராண்டுகள், அரசாங்க ஏஜென்சிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வமான ஸ்டோர், அமைப்புகள் பதிவிடுகின்ற அல்லது அவற்றை ஊக்குவிக்கின்ற படைப்புகள்.
பின்வரும் உள்ளடக்கத்தை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
கூர்மையான பொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள்:
  • பின்வருபவற்றை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, ஒருங்கிணைக்கவோ, நன்கொடை அளிக்கவோ பரிசளிக்கவோ கேட்கவோ முயலும் படைப்புகள்: கூர்மையான பொருட்கள் மற்றும் வேறு ஏதேனும் ஆயுதங்கள் (எ.கா. பெப்பர் ஸ்ப்ரே அல்லது நக்கிள் வளையங்கள்).
  • தயாரிப்பு குறித்த கருத்துகளில் துப்பாக்கிகள், துப்பாக்கியின் பாகங்கள், தோட்டாக்கள், வெடிபொருட்கள், அபாயகரமான ஆயுதங்கள் அல்லது கூர்மையான பொருட்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கும் அல்லது பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் படைப்புகள்.
  • விற்பனை சலுகைகள் மற்றும் அபாயகரமாக இல்லாத பொருட்களை விளம்பரப்படுத்துதல்
புகையிலை மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • புகையிலை/நிக்கோடின் தொடர்புடைய பொருட்களையோ அனைத்து வகையான “ENDS” எலக்ட்ரானிக் நிக்கோடின் வழங்கல் அமைப்புகளின் (Electronic Nicotine Delivery Systems Products) பொருட்கள் உட்பட புகைக்கத் தூண்டும் பொருட்களையோ (எ.கா. எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், வேப்கள் மற்றும் நிக்கோடின் இல்லாத வேப்கள்) வாங்கவோ, விற்பனை செய்யவோ வர்த்தகம் செய்யவோ முயலுதல்.
    • சில்லறை வணிகங்கள், வலைதளங்கள், பிராண்டுகள் உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் பதிவிடுதல் அல்லது டெலிவரி சேவைகள் மற்றும் பிராண்டுப் பரிசுகளை வழங்குவது உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளின் சார்பாகப் படைப்புகளைத் தனிநபர் பகிர்தல் தவிர, பிற சூழல்கள்.
  • புகையிலை/நிக்கோடின் பொருட்களை அல்லது “ENDS” பொருட்களை நன்கொடை அளிக்கவோ பரிசளிக்கவோ முயலுதல்.
    • சில்லறை வணிகங்கள், வலைதளங்கள், பிராண்டுகள் உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் பதிவிடுதல் அல்லது டெலிவரி சேவைகள் மற்றும் பிராண்டுப் பரிசுகளை வழங்குவது உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளின் சார்பாகப் படைப்புகளைத் தனிநபர் பகிர்தல் தவிர, பிற சூழல்கள்.
  • புகையிலை/நிக்கோடின் பொருட்களையோ அனைத்து வகையான “ENDS” பொருட்கள் (நிக்கோடின் இல்லாத வேப்கள்) உட்பட புகைக்கத் தூண்டும் பொருட்களையோ கேட்டல்.
பின்வரும் உள்ளடக்கத்தை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
  • மது அல்லது புகையிலைப் பொருட்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ பரிசளிக்கவோ முயலும் ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள் அல்லது பிராண்டுகள் உட்பட சட்டப்பூர்வ அமைப்புகள் பதிவிடும் அல்லது அவற்றை ஊக்குவிக்கும் படைப்புகள்.
  • புகையிலை, நிக்கோடின் தயாரிப்புகள் அல்லது “ENDS” தயாரிப்புகளை உபயோகிப்பதை விளக்கும் படைப்புகள்.
  • புகையிலை, நிக்கோடின் பொருட்கள், “ENDS” பொருட்கள் அல்லது புகையிலை பிராண்டுகளைப் பயன்படுத்துவதை ஒருங்கிணைக்கும் அல்லது ஊக்குவிக்கும் படைப்புகள்.
  • புகையிலை ஒழிப்புத் தயாரிப்புகளைச் சித்தரிக்கும் படைப்புகள்
  • புகையிலை, புகையிலை தொடர்பான சாதனங்கள் அல்லது புகையிலை பிராண்டுகளின் உபயோகத்தைப் பற்றி விவாதிக்கும் அல்லது ஊக்குவிக்கும் படைப்புகள்
  • கற்பனை அல்லாத சூழலில் புகைபிடித்தல் அல்லது புகையிலை பயன்பாட்டை சித்தரிக்கும் மீடியா படைப்புகள்
    • புகைப்பிடித்தல் எதிர்ப்புப் பிரச்சாரங்கள், புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான ஆலோசனைச் சேவைகள், புகைப்பிடித்தலில் இருந்து மறுவாழ்வு அல்லது PSA சூழல் தவிர
மது
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • பின்வரும் சூழல்களைத் தவிர, பிற சூழல்களில் மதுவை வாங்கவோ விற்பனை செய்யவோ வர்த்தகம் செய்யவோ முயலுதல்:
    • ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள் அல்லது பிராண்டுகள் உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் பதிவிடுதல் அல்லது டெலிவரி சேவைகள் மற்றும் பிராண்டுப் பரிசுகளை வழங்குவது உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளின் சார்பாகப் படைப்புகளைப் தனிநபர் பகிர்தல்.
    • மதுவையோ நிகழ்வு, உணவகம், பார் அல்லது பார்ட்டியில் மது வழங்கப்படும் அல்லது அருந்தப்படும் இடத்திற்கான அழைப்பை வழங்குவதையோ குறிக்கும் படைப்புகள்.
  • ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள், பிராண்டுகள் அல்லது சட்டப்பூர்வ வணிக அமைப்புகளின் சார்பாக ஒரு தனிநபர் பகிரும் படைப்புகள் உட்பட, சட்டப்பூர்வ பிசினஸ் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் பதிவிடுபவை தவிர்த்து, பிற சூழல்களில் மது/புகையிலையை நன்கொடையாக அல்லது பரிசாக அளிக்க முயற்சி செய்தல்.
  • மதுத் தயாரிப்புகள் மற்றும் பானங்களைக் கேட்டல்.
பின்வரும் உள்ளடக்கத்தை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
  • மதுத் தயாரிப்புகள், பானங்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ பரிசளிக்கவோ முயலும் ரீடெய்ல் பிசினஸ்கள், வலைதளங்கள் அல்லது பிராண்டுகள் உட்பட சட்டப்பூர்வ அமைப்புகள் பதிவிடும் அல்லது அவற்றை ஊக்குவிக்கும் படைப்புகள்.
  • மதுத் தயாரிப்புகள், பானங்களை அருந்துவதையோ மதுபான வகைகளைப் பகிர்வதையோ காட்டும் படைப்புகள்.
  • மதுத் தயாரிப்புகளையோ மது வழங்கப்படும் அல்லது அருந்தப்படும் இடத்திற்கான அழைப்பை வழங்குவதையோ குறிக்கும் படைப்புகள்.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
பின்வரும் உள்ளடக்கத்தை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
உடல் எடை குறைப்பு அல்லது உடல் எடை அதிகரிப்புக்கான தயாரிப்புகள் அல்லது சேவைகள்
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • உடல் எடை குறைப்பு அல்லது உடல் எடை அதிகரிப்புக்கான தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்கவோ விற்பனை செய்யவோ வர்த்தகம் செய்யவோ நன்கொடையளிக்கவோ பரிசு அளிக்கவோ குறிப்பிடவோ கேட்கவோ முயலுதல்.
  • உடல் எடை குறைப்பு அல்லது உடல் எடை அதிகரிப்புக்கான தயாரிப்பைச் சாதகமான சூழலில் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ளுதல் அல்லது சித்தரித்தல் அல்லது அதன் பக்க விளைவுகளைப் பற்றி விவாதித்தல்.
  • உடல் எடை குறைப்புக்கான தயாரிப்பின் ஒருங்கிணைப்பை அல்லது விளம்பரத்தைக் காட்டுதல் (அதாவது அது குறித்து நேர்மறையாகப் பேசுவது, அதன் உபயோகத்தை ஊக்குவிப்பது அல்லது அதைப் பயன்படுத்த/உருவாக்குவதற்கான வழிமுறைகளை வழங்குவது).
  • உடல் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையைக் கொண்ட கூற்றுகள் (அதாவது, தனிநபரின் தோற்றம், குறிப்பிட்ட உடல் பாகங்கள் அல்லது சுகாதாரத்தை எதிர்மறையாகவும் தாக்கும் விதமாகவும் தாக்குகின்ற வார்த்தைகள், விளக்கங்கள் அல்லது கேள்விகள்), அல்லது பிதுக்கிப் பிடிக்கப்பட்ட கொழுப்பைக் காட்டும் குறிப்பிட்ட உடல் பகுதியின் நெருக்கமான காட்சிகள்.
  • நகைகள் அல்லது பேட்ச்கள் போன்ற அணியக்கூடிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே முடிவுகளை அடைய முடியும் என்று கூறும் கூற்றுகள்.
  • உடல் எடைக் குறைப்பு அல்லது உடல் எடை அதிகரிப்புச் சூழலில் கிளிக்பெயிட் உத்திகளைப் பயன்படுத்துதல் அதாவது மிகையான அல்லது அதீத ஆரோக்கியக் கூற்றுகளைக் கொண்ட பரபரப்பான வார்த்தைகள் அல்லது பொறுப்புத்துறப்புகள் அல்லது தகுதிகள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் குறிப்பிட்ட விளைவுகளுக்கு உத்தரவாதம் அளித்தல் போன்றவை.
அழகுசார் தயாரிப்புகள், சிகிச்சைமுறைகள் அல்லது அறுவைச் சிகிச்சைகள்
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • அழகு சாதனங்கள், அழகு தொடர்பான சிகிச்சைகள் அல்லது அறுவைச் சிகிச்சைகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ, குறிப்பிடவோ, கேட்கவோ முயல்தல். இதில் அடங்குபவை:
    • பிளீச்சிங் கிரீம்கள் போன்ற சருமத்தை வெள்ளையாக்கும் பொருட்கள்.
    • மக்களின் முகங்கள் அல்லது உடல்களின் இயக்கத்தை அல்லது அமைப்பைச் சரிசெய்யும் அல்லது மீட்டெடுக்கும் நோக்கிலான அழகு தொடர்பான சிகிச்சைகள்.
  • அழகு தொடர்பான சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சையின் நன்மைகள் அல்லது தீமைகள் அல்லது பக்க விளைவுகளை எடுத்துக்காட்டி அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ளுதல் அல்லது சித்தரித்தல்.
  • அழகுசார் சிகிச்சைமுறை அல்லது அறுவைச் சிகிச்சையின் ஒருங்கிணைப்பு அல்லது விளம்பரத்தைக் காட்டுதல் (அதாவது, அதைப் பற்றி நேர்மறையாகப் பேசுவது, அதைப் பெறுவதை ஊக்குவிப்பது அல்லது அதைப் பெறுவதற்கான அல்லது செய்வதற்கான வழிமுறைகளை வழங்குவது).
  • உடல் தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையைக் கொண்ட கூற்றுகளைக் கொண்டிருத்தல் (அதாவது, ஒரு நபரின் தோற்றம், உடலின் குறிப்பிட்ட பாகங்கள் அல்லது சுகாதாரத்தை எதிர்மறையாகவும் தாக்கும் விதமாகவும் தாக்குகின்ற வார்த்தைகள், விளக்கங்கள் அல்லது கேள்விகள்).
கவனத்திற்கு: உடற்பயிற்சி முறைகளை (பைலேட்ஸ் போன்றவை) அல்லது தற்காலிக அழகு சாதனங்களை (ஒப்பனை போன்றவை) விளம்பரப்படுத்துவது இந்தக் கொள்கையின் கீழ் சேர்க்கப்படவில்லை.
தவறாக வழிநடத்தும் ஆரோக்கியம் சார்ந்த நடைமுறைகள்
  • குணப்படுத்த முடியாத நோய்கள் மற்றும்/அல்லது மரணத்தை ஏற்படுத்தும் இறுதி நிலையில் உள்ள நோய்களை (முழுமையான பட்டியல்) குணப்படுத்துவதாகவோ, சரிசெய்வதாகவோ, அழிப்பதாகவோ கூறும் கூற்றுகள் (மருத்துவ நிபுணர்கள் அல்லது மருத்துவ நிறுவனங்கள் தெரிவிப்பவையும் இதிலடங்கும்): கவனத்திற்கு: இந்த நிலைகளின் அறிகுறிகளுக்குச் சிகிச்சையளிப்பது அல்லது அவற்றை நிர்வகிப்பது தொடர்பான கூற்றுகளுக்கு இது பொருந்தாது.
    • நீரிழிவு நோய்
    • ஹெர்பெஸ்
    • தைராய்டு
    • சொரியாசிஸ்
    • எபோலா
    • புற்றுநோய்
    • ஆட்டிசம்
    • அல்சைமர் நோய்
    • பார்க்கின்சன் நோய்
    • அமியோட்ரோபிக் லேட்ரல் ஸ்க்லரோசிஸ் (ALS)
    • மனித நோயெதிர்ப்புக் குறைபாடு வைரஸ் (HIV)
  • ஆரோக்கியம் தொடர்பான சூழலில் கிளிக்பெயிட் உத்திகளைப் பயன்படுத்துதல், அதாவது மிகைப்படுத்தப்பட்ட அல்லது அதி தீவிரமான ஆரோக்கியக் கூற்றுகளைக் கொண்ட பரபரப்பான வார்த்தைகள் அல்லது பொறுப்புத்துறப்புகள் அல்லது தகுதிநிலைகள் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் குறிப்பிட்ட ஆரோக்கியம் தொடர்பான விளைவுகளுக்கு உறுதியளித்தல் போன்றவை.
வயதுவந்தோர் பாலியல் உணர்வைத் தூண்டும் தயாரிப்புகள்
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • கற்பனையான அல்லது கற்பனையற்ற சூழலில், ஒருவரின் பாலியல் இன்பத்தைத் தூண்டுவதை அல்லது ஒருவரின் பாலியல் உணர்வை அதிகரிப்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டு வயதுவந்தோரின் பாலியல் உணர்வைத் தூண்டும் தயாரிப்புகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ, விளம்பரம் செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ, கேட்கவோ முயலுதல். இதில் அடங்குபவை:
    • பாலியல் பொம்மைகள்
    • பாலியல் பொருட்கள்
    • பாலியல் விருப்பத்தைத் தூண்டும் அல்லது பாலியல் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்கள் போன்ற அறுவைச் சிகிச்சை அல்லாத பிறப்புறுப்பு நீட்டிப்புப் பொருட்கள்
    • பாலியல் விருப்பம் அல்லது தூண்டலை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் தயாரிப்புகள்
    • தெளிவான விவரங்களை வழங்காமல் பாலியல் பொம்மைகளைச் சித்தரித்தல்
பாலின ஆரோக்கியம் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கான தயாரிப்புகள்
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • பாலின ஆரோக்கியம் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கான தயாரிப்புகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ, கேட்கவோ முயலுதல். இதில் அடங்குபவை:
    • ஆண் அல்லது பெண் பிறப்புறுப்பு வடிவத்தில் உள்ள பொருட்கள் உட்பட, மருத்துவப் பயன்களை மையப்படுத்தாமல் பாலியல் இன்பத்தை மையப்படுத்தும், இனப்பெருக்க ஆரோக்கியம் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கான தயாரிப்புகள்
    • பாலின இனப்பெருக்கக் கோளாறுகளுக்குத் தீர்வுகாணும் தயாரிப்புகள்
    • பிறப்புறுப்பை அழகுபடுத்துவதற்கான அறுவை சிகிச்சைகள்
    • வயதுவந்தோர் பிறப்புறுப்பிற்கான அறுவை சிகிச்சைகள்
    • பாலியல் இன்பத்தை மையமாகக் கொண்ட பாலியல் கல்வி
    • ஹார்மோன் தயாரிப்புகள் (எ.கா. டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டர்கள்)
வயது வந்தோர் சார்ந்த பாலியல் தொழில்கள்
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • ஒருவரின் பாலியல் இன்பத்தைத் தூண்டக்கூடிய அல்லது ஒருவரின் பாலியல் உணர்வை அதிகரிக்கக்கூடிய, வயதுவந்தோர் சார்ந்த பாலியல் தொழில்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, விளம்பரம் செய்யவோ, கேட்கவோ முயலுதல். இதில் அடங்குபவை:
    • வயதுவந்தோருக்கான பொழுதுபோக்கு பிசினஸ்கள்
    • வயது வந்தோருக்கான நிறுவனங்கள்
    • பாலியல் கல்வி தொடர்பான சேவைகள்
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேம்கள்
பின்வரும் உள்ளடக்கத்தை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளோம்:
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேம்கள்
  • விளையாடுவதற்கு ஏதேனும் பணம் செலுத்த வேண்டிய (பணம் அல்லது டிஜிட்டல்/விர்ச்சுவல் கரன்சிகள் எ.கா: பிட்காயின்) மற்றும் பரிசில் ஏதேனும் பணத்தை வழங்குகிற ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை விற்க, வர்த்தகம் செய்ய, சித்தரிக்க அல்லது விளம்பரம் செய்ய முயலும் பகிர்வுகள். இதில் பின்வருபவை அடங்கும் (ஆனால் இவை மட்டுமே அல்ல):
    • திறன் அடிப்படையிலான கேம்கள், லாட்டரிகள்/பரிசுச்சீட்டுகள், பந்தயம் கட்டுதல், விளையாட்டின் அடிப்படையில் பந்தயம் கட்டுதல், கேசினோ கேம்கள், வாய்ப்பின் அடிப்படையிலான கேம்கள் அல்லது பரிசுக் குலுக்கல்/குலுக்கல் பரிசு.
    • குறுகிய கால இலவச உபயோகத்திற்குப் பிறகு, பேமெண்ட் செய்யும்படி கேட்கும் சூதாட்டக் கேம்கள்.
சமூகக் கேசினோ கேம்கள்
  • பணம் அல்லது பணத்தின் மதிப்பை வெல்லும் வாய்ப்பு இல்லாத ஸ்லாட் இயந்திரங்கள் போன்ற சூதாட்டக் கேம்களைத் தூண்டும் சமூகக் கேசினோ கேம்களை விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, குறிப்பிடவோ ஊக்குவிக்கவோ முயலும் படைப்புகள். இதில் பண மதிப்பு அல்லாத “நாணயங்கள்” வெல்லும் வாய்ப்பைக் குறிக்கும் படைப்புகள் அடங்கும்.
சூதாட்டச் சூழலில் கட்டணமின்றி விளையாடக்கூடிய விளையாட்டுகள்
  • சூதாட்ட விளையாட்டுகளை உருவகப்படுத்தும் கட்டணமின்றி விளையாடக்கூடிய விளையாட்டுகளை விற்க, வர்த்தகம் செய்ய, சித்தரிக்க அல்லது விளம்பரம் செய்ய முயலும் படைப்புகள், இதில் விளையாடுவதற்குப் பண மதிப்புள்ள எதுவும் தேவையில்லை, ஆனால் பணம் அல்லது பணத்தின் மதிப்புள்ளதை வெல்ல வாய்ப்பு இருக்கக்கூடும்.
அழிந்துவரும் உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் (வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள்)
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • அழிந்துவரும் உயிரினங்கள் அல்லது அவற்றின் உடல் உறுப்புகள் அல்லது பாதுகாக்கப்பட்ட தாவர இனங்களை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ, கேட்கவோ முயலுதல்.
  • படைப்புகளைப் பதிவிட்டவர் அழிந்துவரும் உயிரினங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை தாங்களாகவோ பிறவற்றின் வழியாகத் தங்கள் கூட்டாளிகள் மூலமாகவோ வேட்டையாடுவதையோ, வாங்குவதையோ, வர்த்தகம் செய்வதையோ ஒப்புக்கொள்ளுதல் அல்லது ஊக்குவித்தல். வெளியாட்கள் வேட்டையாடுதல் பற்றிய சித்தரிப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.
  • படைப்புகளைப் பதிவிட்டவர் அழிந்துவரும் உயிரினங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை தாங்களாகவோ தங்களது கூட்டாளிகள் மூலமோ வேட்டையாடுவதைச் சித்தரித்தல்.
  • அழிந்துவரும் உயிரினங்கள் அல்லது அவற்றின் உறுப்புகள் அல்லது அழிந்துவரும் எந்தவொரு வன உயிரினம் அல்லது தாவரத்தில் இருந்து உருவாக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் அல்லது செய்யும் ஒருங்கிணைப்பு அல்லது விளம்பரத்தைக் காட்டுதல் (வேட்டையாடுவது பற்றி நேர்மறையாகப் பேசுவது, அவ்வாறு செய்ய ஊக்குவிப்பது அல்லது வழிமுறைகளை வழங்குவது).
அழிவின் விளிம்பில் இருக்காத விலங்குகள்
  • இந்தச் சூழ்நிலைகளைத் தவிர, அழிவின் விளிம்பில் இருக்காத விலங்குகளை வாங்க, விற்க அல்லது வர்த்தகம் செய்ய முயலும் படைப்புகள்:
    • சில்லறை பிசினஸ்கள், சட்டப்பூர்வமான வலைதளங்கள், பிராண்டுகள் அல்லது மறுவாழ்விடங்கள் உட்பட சட்டப்பூர்வமான அமைப்புகளைப் பிரதிபலிக்கும் பக்கம், குழு அல்லது Instagram சுயவிவரம் பதிவிடுதல் அல்லது சட்டப்பூர்வமான அமைப்புகள் சார்பாகப் படைப்புகளைத் தனிநபர் பகிர்தல்.
    • இருவருக்கிடையில் தத்தெடுப்புகளுக்கான மறுவாழ்விடங்கள் உட்பட அழிவின் விளிம்பில் இருக்காத விலங்குகளைத் தத்தெடுக்கின்ற, பரிசளிக்கின்ற, கேட்கின்ற, நன்கொடையளிக்கின்ற அல்லது மறுவாழ்வளிக்கின்ற சூழலில் பதிவிடுதல்.
    • மத வழிபாட்டுக்குக் காணிக்கையாக விலங்குகளை விற்பனை செய்தல் அல்லது தொலைந்த செல்லப்பிராணிகளுக்கான நிவர்த்தியாக வழங்குதல்.
    • கால்நடைகளை விற்பனை செய்யும் சூழலில் பதிவிடுதல்.
    • விலங்குக் கொம்புகள், உறுப்புகள், மூட்டுகள், சடலங்கள், டாக்ஸிடெர்மி, மலம் (எரு அல்லது உரம் தவிர) ஆகியவற்றை வாங்குகின்ற, விற்பனை செய்கின்ற அல்லது பரிசளிக்கின்ற, கேட்கின்ற, நன்கொடையளிக்கின்ற சூழலில் பதிவிடுதல்.
    • மனிதர் உட்கொள்வதற்காக விலங்குகள் தொடர்பான தயாரிப்புகளை வழங்கும் சூழலில் பதிவிடுதல், எ.கா: முட்டைகள், மீன் மற்றும் பல.
வரலாற்றுக் கலைப்பொருட்கள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
வரலாற்றுக் கலைப்பொருட்களை வாங்கவோ, விற்கவோ, வர்த்தகம் செய்யவோ, நன்கொடையளிக்கவோ, பரிசளிக்கவோ முயலுதல்.
ஆபத்தான பொருட்கள் மற்றும் பொருள் வகைகள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் மற்றும் பொருள் வகைகளை வாங்கவோ விற்கவோ வர்த்தகம் செய்யவோ நன்கொடையளிக்கவோ பரிசளிக்கவோ முயலும் படைப்புகள்.
மனித உடல் உறுப்புகள் மற்றும் உடல் திரவங்கள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருமாறு உள்ள உள்ளடக்கம்:
  • தனிமனித உரிமை மீறல் கொள்கையின் கீழ் தடைசெய்யப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான படைப்புகளைத் தாண்டி மனித உடல் உறுப்புகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ, வர்த்தகம் செய்யவோ முயலுதல்.
  • மனித உடல் திரவங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் கேட்டல்.
  • மனித உடல் திரவங்களை வாங்கவோ, விற்கவோ, வர்த்தகம் செய்யவோ முயல்தல்.
  • விந்து, ரத்தப் பிளாஸ்மா போன்ற மனித உடல் திரவங்களை நன்கொடையளிக்கப் பதிவிடுதல் தவிர.
திரும்பப்பெறப்படும் பொருட்கள்
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
திரும்பப்பெறப்படும் பொருட்களை வாங்க, விற்க, வர்த்தகம் செய்ய, வர்த்தகம் செய்வதை ஒருங்கிணைக்க, நன்கொடையளிக்க, பரிசளிக்க அல்லது வேண்டுமெனக் கேட்க முயலும் படைப்புகள்.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
தகவல்
சமீபத்திய சமூகத் தரநிலைகள் அமலாக்க அறிக்கையைக் காண்க
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்