தனியுரிமை மீறல்கள்
கொள்கை விவரம்
பதிவை மாற்றவும்
இன்று
1 மே, 2026
3 அக்., 2024
27 ஜூன், 2024
30 ஜூன், 2023
24 பிப்., 2023
30 செப்., 2022
25 பிப்., 2022
25 நவ., 2021
1 அக்., 2021
19 நவ., 2020
1 டிச., 2018
30 ஜூன், 2018
நியாயமான கொள்கை
எங்கள் பயனர்களின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதை எங்கள் சேவைகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. உங்களது தனிப்பட்ட அடையாளத்தையும் தகவல்களையும் பாதுகாப்பதற்குக் கடினமாக உழைக்கிறோம். மேலும் தங்களைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ சில வகையான தனிப்பட்ட அல்லது இரகசிய தகவல்களை பதிவிட பயனர்களை அனுமதிக்க மாட்டோம். பயனர்கள் தங்கள் தனியுரிமைகளை மீறுவதாகக் கருதும் படத்தைப் புகாரளிப்பதற்கான வழிகளையும் நாங்கள் பயனர்களுக்கு வழங்குகிறோம்.
நிதி, வசிப்பிடம் மற்றும் மருத்துவத் தகவல்களுடன் சட்டத்திற்கு புறம்பான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் உட்பட உடல் ரீதியான அல்லது நிதி ரீதியான பாதிப்பை உண்டாக்கக்கூடிய தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களைப் பகிரும், வழங்கும் அல்லது கேட்கும் பகிர்வை அகற்றுகிறோம். செய்தி கவரேஜ், நீதிமன்றத் தாக்கல், செய்தி வெளியீடுகள் அல்லது பிற ஆதாரங்களின் வழியாகவும் தனிப்பட்ட தகவல்கள் பொதுவில் கிடைக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம். அப்படி நிகழும்போது, தகவல்களைப் பதிவிட நாங்கள் அனுமதிக்கக்கூடும்.
கட்டணப் பகிர்விற்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம். தயாரிப்பு அல்லது சேவையின் விவரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மறையான பயனர் அனுபவத்தை வழங்கும் விளம்பரங்களை நாங்கள் அனுமதித்தாலும், பயனர்களின் தனிப்பட்ட கஷ்டங்களைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தும், அவர்களின் குணநலன்களை எதிர்மறையாகவோ துல்லியமற்றதாகவோ காட்டும் அல்லது முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் தெரியும் என மறைமுகமாகத் தெரிவிக்கும் விளம்பரங்களை அகற்றுகிறோம். கட்டணப் பகிர்வு தொடர்பான எங்களின் தனியுரிமை விதிகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு தனியுரிமை மீறல்கள் மற்றும் தனிப்பட்ட தொடர்புப்படுத்தல்கள் தொடர்பான எங்கள் விளம்பரத் தரநிலைகளைப் பாருங்கள்.
பின்வருவனவற்றை அனுமதிக்க மாட்டோம்:
எங்கள் சேவைகளில் அல்லது நிறுவனம் சாராத இணைப்புகள் மூலம், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் அல்லது கேட்கும் பகிர்வுகள்:
தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல் (PII)
- பதிவிடுபவர் அல்லது பிறரின் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவலை (ஒரு தனிநபரைத் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல்) பகிரும் பகிர்வுகள். இதில் அடங்குபவை:
- சமூகப் பாதுகாப்பு எண்கள் (SSN), பாஸ்போர்ட் எண்கள் அல்லது தனிநபர் வரி செலுத்துநர் அடையாள எண்கள் (ITIN) போன்ற தேசிய அடையாள எண்கள்.
- சட்ட அமலாக்கம், இராணுவம் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளின் அரசாங்க ஐடிகள்.
- குடியுரிமைப் பதிவுத் தகவல்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்லது பதிவுகள் (திருமணம், பிறப்பு, இறப்பு, பெயர் மாற்றம் அல்லது பாலின அங்கீகார ஆவணங்கள் போன்றவை)
- கிரீன் கார்டுகள், பணி அனுமதிகள் அல்லது விசாக்கள் போன்ற குடிவரவு மற்றும் பணி நிலைக்கான ஆவணங்கள்
- பிறரின் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவலைக் கேட்கும் பகிர்வுகள்
தனிப்பட்ட தொடர்புத் தகவல்கள்
- தனிப்பட்ட தொடர்புத் தகவல்களை அனைவரும் பார்க்கும்படி தனிநபர் அமைத்திருக்கும் சூழல்கள் அல்லது தொண்டு காரணங்களுக்காக விளம்பரப்படுத்த, காணாமல் போன நபர்கள், விலங்குகள் அல்லது காணாமல் போன பொருட்களின் உரிமையாளர்களைக் கண்டறிய அல்லது வணிகம்/சேவை வழங்குநர்களைத் தொடர்புகொள்ள (தனிநபரின் ஒப்புதலின்றி தனிப்பட்ட தொடர்புத் தகவல்கள் பகிரப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டால் தவிர) பகிரப்பட்டிருக்கும் அல்லது கேட்கப்பட்டிருக்கும் சூழல்கள் தவிர்த்து மற்ற சூழல்களில் பிறரின் தனிப்பட்ட தொடர்புத் தகவல்களைப் பகிர்கின்ற பகிர்வுகள்.
குடியிருப்பு குறித்த தகவல்கள்
ஒரு குடியிருப்பை எளிதான முறையில் அடையாளம் காண வழிவகுக்கும் தகவல்களைப் பகிரும் பகிர்வு, அதாவது:
- பின்வரும் சூழல்கள் நீங்கலாக, பிறரின் தனிப்பட்ட குடியிருப்பு முகவரிகளை முழுமையாகப் பகிரும் பகிர்வுகள், கட்டிடப் பெயர் அல்லது முகவரியை அடையாளப்படுத்தும் வரைபடத்தில் உள்ள பின்கள் (பின்கள் தளத்திற்கு வெளியே உள்ள இணைப்பில் இருந்தாலும் கூட) இவற்றில் அடங்கும்:
- தொண்டு நிறுவன நிகழ்வுகளை விளம்பரப்படுத்த, காணாமல் போன நபர்கள், விலங்குகள் அல்லது காணாமல் போன பொருட்களின் உரிமையாளர்களைக் கண்டறிவதற்கு உதவ அல்லது பிசினஸ் அல்லது சேவை வழங்குநர்களைத் தொடர்புகொள்வதற்காகப் பகிரப்படும்போது
- குடியிருப்பானது உயர் பதவியில் உள்ள பொது அதிகாரிக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பணியிடமாகவோ தூதரகமாகவோ இருப்பது
- பிறரின் தனிப்பட்ட குடியிருப்பு முகவரிகளைப் பகுதியளவு பகிரும் பகிர்வுகள் (குடியிருப்பானது உயர் பதவியில் உள்ள பொது அதிகாரிக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பணியிடமாகவோ தூதரகமாகவோ இருப்பது தவிர):
- ஆர்ப்பாட்டங்கள் அல்லது குடியிருப்பாளரின் கண்காணிப்பு ஆகிய சூழலில் பகிரப்படும்போது மற்றும் குடியிருப்பின் இருப்பிடம் பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றால் அடையாளம் காணப்படும்போது:
- தெரு
- நகரம் அல்லது சுற்றுப்புறம் (50,000க்கும் குறைவான குடியிருப்பாளர்கள் உள்ள நகரங்களுக்கு மட்டும்)
- அஞ்சல் குறியீடு
- GPS பின்கள் அல்லது இவற்றில் எதையேனும் வரைபடத்தில் அடையாளம் காட்டும் பின்கள் (பின்கள் தளத்திற்கு வெளியே உள்ள இணைப்பில் இருந்தாலும் கூட)
- பின்வரும் நிபந்தனைகள் அனைத்தும் பொருந்தினால் தனிநபர் குடியிருப்புகளின் வெளிப்புறக் காட்சியைக் காட்டும் படங்கள்:
- அந்தக் குடியிருப்பு ஒற்றைக் குடும்பத்திற்கான வீடாக இருத்தல் அல்லது குடியிருப்பவரின் கதவு எண்/கட்டடத்தின் பெயர் படம்/தலைப்பில் அடையாளம் காணப்பட்டிருத்தல்.
- குடியிருப்பு இடம் பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றால் அடையாளம் காணப்படுகிறது:
- தெரு
- நகரம் அல்லது சுற்றுப்புறம் (50,000க்கும் குறைவான குடியிருப்பாளர்கள் உள்ள நகரங்களுக்கு மட்டும்)
- அஞ்சல் குறியீடு
- GPS பின்கள் அல்லது இவற்றில் எதையேனும் வரைபடத்தில் அடையாளம் காட்டும் பின்கள் (பின்கள் தளத்திற்கு வெளியே உள்ள இணைப்பில் இருந்தாலும் கூட)
- குடியிருப்பவர்களை அடையாளம் காண உதவும் பகிர்வு.
- அந்தக் குடியிருப்பாளர் தனது தனிப்பட்ட குடியிருப்பை வெளிப்படுத்துவதை எதிர்க்கிறார் அல்லது குடியிருப்பாளருக்கு எதிராகப் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் சூழல் உள்ளது.
- குடியிருப்பின் படங்கள் பகிரப்படவில்லை, ஏனென்றால் செய்தியின் மையமாக குடியிருப்பு உள்ளது (இதில் குடியிருப்பாளருக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்யும் சூழலில் பகிரப்பட்டது அடங்காது)
பின்வரும் தகவல்களைக் கோரும் பகிர்வு:
- பிறரின் குடியிருப்பு பற்றிய தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் பகிர்வுகள் (குடியிருப்பானது உயர் பதவியில் உள்ள பொது அதிகாரிக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வப் பணியிடமாகவோ தூதரகமாகவோ இருப்பது நீங்கலாக)
- பாதுகாப்பு இல்லங்களின் அல்லது கீழே உள்ள ஏதேனும் ஒன்றைப் பகிர்வதன் மூலம் (அதன் நிறுவனம் பற்றிய தகவல்களைத் தீவிரமாக விளம்பரப்படுத்தும் சூழல் நீங்கலாக) பாதுகாப்பு இல்லம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் பகிர்வு
- உண்மையான முகவரி (கவனத்திற்கு: "அஞ்சல் பெட்டி எண் மட்டும்" அனுமதிக்கப்படும்)
- பாதுகாப்பு இல்லத்தின் படங்கள்
- பாதுகாப்பு இல்லத்தை அடையாளம் காணத்தக்க நகரம்/அருகிலுள்ள பகுதி
- பாதுகாப்பு இல்லத்தில் இருப்பவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் தகவல்கள்
மருத்துவத் தகவல்கள்
- மருத்துவப் பதிவுகள் அல்லது பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்து பெறப்பட்டது எனத் தெளிவாகத் தெரியும் பட்சத்தில் மற்றவர்களின் (கண்ணால் பார்க்கக்கூடிய வகையில் காட்டப்படும்போது அல்லது ஆடியோ/வீடியோ மூலம் பகிரப்படும்போது) மருத்துவ, உளவியல், பயோமெட்ரிக் அல்லது மரபணு/பரம்பரைத் தகவல்களைப் பகிரும், அவற்றைக் கேட்கும் பகிர்வுகள்.
நிதித் தகவல்கள்
- பதிவிட்டவர் அல்லது பிறரைப் பற்றிய தனிப்பட்ட நிதித் தகவல்களைப் பகிர்கின்ற அல்லது கேட்கின்ற பகிர்வு, ஒரு நபரின் தனிப்பட்ட நிதி பற்றிய தகவல்களாக வரையறுக்கப்படுவதில் அடங்குபவை:
- பொதுவில் வெளியிடப்படாத நிதி தொடர்பான பதிவுகள் அல்லது அறிக்கைகள்.
- பாதுகாப்பு எண்கள் அல்லது பின் குறியீடுகள் இருக்கும் வங்கிக் கணக்கின் எண்கள்.
- உள்நுழைவு விவரங்கள், பாதுகாப்பு எண்கள் அல்லது பின் குறியீடுகளுடன் இருக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான தகவல்கள்.
- காலாவதித் தேதிகள் அல்லது பாதுகாப்புப் பின்கள் அல்லது குறியீடுகளுடன் இருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்கள்.
- வணிகங்கள் அல்லது நிறுவனங்களின் நிதிகளைப் பற்றிய தகவல்களாக வரையறுக்கப்பட்டுள்ள, ஒரு வணிகம் அல்லது நிறுவனத்தின் பொது அல்லாத நிதித் தகவல்களைப் பகிர்கின்ற அல்லது கேட்கின்ற பகிர்வுகள், இவற்றை முதலில் நிறுவனமே பகிரும் சூழல் (இதன்பிறகு அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பகிர்தல் இதில் அடங்கும்) அல்லது பொது அறிக்கையிடல் தேவைகள் மூலம் பகிரும் சூழல் (எடுத்துக்காட்டாக, பங்குச் சந்தைகள் அல்லது ஒழுங்குமுறை முகமைகளால் தேவைப்படும்) இதில் அடங்காது, பின்வருபவை அடங்கும்:
- பொதுவில் வெளியிடப்படாத நிதி தொடர்பான பதிவுகள் அல்லது அறிக்கைகள்
- பாதுகாப்பு அல்லது பின் குறியீடுகளுடன் கூடிய வங்கிக் கணக்கு எண்கள்.
- உள்நுழைவு விவரங்கள், பாதுகாப்பு எண்கள் அல்லது PIN குறியீடுகளுடன் கூடிய டிஜிட்டல் பேமெண்ட் முறை தகவல்கள்.
ஹேக் செய்யப்பட்ட தளங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள்
- பாதிக்கப்பட்ட நபர் ஒரு பிரபலமான நபர் அல்லது தனிநபர் என யாராக இருந்தாலும், பதிவிட்டவர் கூறியதன் அடிப்படையில் அல்லது உறுதிசெய்யப்பட்டதன் அடிப்படையில் அது ஹேக் செய்யப்பட்ட ஒன்றில் இருந்து பெறப்பட்ட பகிர்வு.
பின்வரும் பகிர்வுகளும் அகற்றப்படக்கூடும்:
- நபரின் புகாரளிக்கப்பட்ட படம் அல்லது வீடியோ, அதில் படத்தில் இருக்கும் நபர்:
- 13 வயதுக்குட்பட்டவராக இருத்தல், மற்றும் பகிர்வானது சிறார், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரால் புகாரளிக்கப்பட்டிருப்பது.
- 13 முதல் 18 வயதிற்குட்பட்டவர் மற்றும் பகிர்வைப் புகாரளித்தவர் அந்தச் சிறார்.
- அமெரிக்காவைச் சாராதவர்களால் பகிர்வு புகாரளிக்கப்பட்டிருக்கும் சூழலில் வயது வந்த ஒரு நபரின் படத்தை/வீடியோவை அகற்றுவதற்கான உரிமைகளைப் பொருந்தக்கூடிய சட்டமானது வழங்கக்கூடும்.
- பகிர்வு குறித்து தாமாகவே புகாரளிக்க இயலாத உடல்நிலை சரியில்லாத எந்த ஒரு நபரும்.
பின்வரும் சமூகத் தரநிலைகளுக்கு, பின்வருவனவற்றை அமல்படுத்த கூடுதல் தகவல்கள் மற்றும்/அல்லது சூழல் எங்களுக்கு வேண்டும்:
- மருத்துவ அல்லது சுகாதார நிறுவனத்தில் உள்ள ஒரு தனிநபரின் அல்லது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது குறைந்த வயதுடையவர், மருத்துவ அல்லது சுகாதார நிறுவனத்திற்குள் நுழைவது அல்லது வெளியேறுவதைக் காட்டும் பகிர்வுகளாக வரையறுக்கப்பட்டுள்ள தனிநபர் & மருத்துவ நிறுவனங்களின் சித்தரிப்புகள் மற்றும் இவர்களால் புகாரளிக்கப்படுதல்:
- படத்தில் உள்ள நபர்
- படத்தில் உள்ள நபரின் பிரதிநிதி
- படத்தில் உள்ள நபருக்கான பராமரிப்புப் பொறுப்புகளுடன் கூடிய மருத்துவ அல்லது சுகாதார நிறுவனம் அல்லது
- படத்தில் உள்ள நபருக்கு வேலை வாங்கித் தரும் மருத்துவ அல்லது சுகாதார நிறுவனம்
- வெளிநாட்டு அரசாங்கத்தின் செல்வாக்கினால் நடத்தப்படும் பணியின் ஒரு பகுதியாகப் பகிரப்பட்ட தேர்தலுடன் தொடர்புடைய பொதுவில் வெளிப்படுத்தக்கூடாத தகவல்களை வெளியிடுவதாகத் தோன்றும் மூல ஆவணம்.
- ரகசியத் தகவல் கசிவின் பின்னணியில் உள்ள நாட்டின் அரசால் கட்டுப்படுத்தப்படும் மீடியா நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட அத்தகைய தகவல் கசிவு குறித்த செய்தி சேகரிப்பை அகற்றுகிறோம்.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
தனியுரிமை மீறல்கள் தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்