தவறான தகவல்

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
தடைசெய்யப்பட்டவற்றின் விரிவான பட்டியலைத் தெளிவாக விளக்குவது சாத்தியமில்லை என்பதால் தவறான தகவல் எங்கள் சமூகத் தரநிலைகளில் கூறப்பட்டுள்ள பிற வகை பேச்சுகளில் இருந்து வேறுபட்டது. உதாரணமாக, காணத்தகாத வன்முறை அல்லது வெறுக்கத்தக்க நடத்தை உடன் நாங்கள் தடைசெய்யும் பகிர்வுகளை எங்கள் கொள்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும், அந்தக் கொள்கைகளை ஏற்காதவர்களும் அவற்றைப் பின்பற்றலாம். இருப்பினும், தவறான தகவலில் அத்தகைய ஒரு வரம்பை நாங்கள் வழங்க முடியாது. உலகம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது, இப்போது உண்மையாக இருப்பது அடுத்த நிமிடமே உண்மை அல்லாததாக இருக்கக்கூடும். மக்களும் தங்களைச் சுற்றியுள்ள உலகைப் பற்றி வெவ்வேறு நிலையிலான தகவல்களைக் கொண்டுள்ளனர், உண்மையில்லாத ஒன்றை அவர்கள் உண்மையென நம்பக்கூடும். வெறுமென “தவறான தகவலைத்” தடைசெய்யும் கொள்கையானது எங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள அறிவிப்பை வழங்காது, தகவல்களுக்கான சரியான அணுகல் எங்களுக்கு இல்லை என்பதால் அதைச் செயல்படுத்தவும் முடியாது.
மாறாக, எங்கள் கொள்கைகள் வெவ்வேறு வகையான தவறான தகவல்களைத் தெளிவாக விளக்குகின்றன மற்றும் அந்தப் பேச்சை நாங்கள் பார்க்கும்போது எவ்வாறு அதைக் கையாளுகிறோம் என்பதைப் பற்றித் தெளிவாக வழிகாட்ட முயல்கிறது. ஒவ்வொரு வகைக்கும் எங்கள் கருத்து, பாதுகாப்பு, கண்ணியம், நம்பகத்தன்மை, தனியுரிமை ஆகியவற்றின் மதிப்புகளைச் சமநிலைப் படுத்துவதற்கான எங்களின் முயற்சியை எங்கள் அணுகுமுறை பிரதிபலிக்கிறது.
உடல் சார்ந்த தீங்கை உடனடியாக ஏற்படுத்தும் அபாயத்திற்கு நேரடியாகப் பங்களிக்க வாய்ப்புள்ள தவறான தகவலை அகற்றுகிறோம். அரசியல் செயல்முறைகளின் இயக்கத்தில் நேரடியாக இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ள படைப்புகளையும் அகற்றுவோம். இந்த வகைகளில் தவறான தகவல் என்பது என்ன என்பதைத் தீர்மானிப்பதில், படைப்பின் உண்மைநிலை மற்றும் உடனடி தீங்கின் அபாயத்திற்கு நேரடியாகப் பங்களிக்க வாய்ப்புள்ளதா என்பதை மதிப்பிடுவதில் அறிவும் நிபுணத்துவமும் கொண்ட சார்பற்ற வல்லுநர்களுடன் கூட்டாக இணைந்துள்ளோம். உதாரணமாக, இதில் உள்நாட்டு முரண்பாடு பற்றிய வதந்தியின் உண்மையைத் தீர்மானிக்கும் நோக்கில் அந்த நாட்டிலேயே இருக்கும் மனித உரிமைகள் ஆணையங்களுடன் கூட்டிணைவதும் அடங்கும்.
பிற எல்லாத் தவறான தகவல்களுக்கும், அதன் பாதிப்பைக் குறைப்பதிலும் பயனுள்ள உரையாடலை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறோம். மக்கள் பெரும்பாலான நேரங்களில் ஒரு தகவலை மிகைப்படுத்தியோ (“விளையாட்டில் இந்த அணி மோசமான சாதனை செய்துள்ளது!”) நகைச்சுவையாகவோ நையாண்டியாகவோ (“எனது கணவர் இப்போது இந்த வருடத்திற்கான சிறந்த கணவர் விருதைப் பெற்றார்”) தீங்கற்ற வழியில் தவறான தகவலைப் பயன்படுத்துவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் துல்லியமற்ற தகவல்கள் கொண்ட ஸ்டோரிகள் மூலம் அவர்கள் தங்களின் அனுபவத்தைப் பகிரலாம். சில சூழ்நிலைகளில் பிறர் தவறானது எனக் கருதக்கூடிய மிகவும் தனிப்பட்ட கருத்துகளை மக்கள் பகிர்வார்கள் அல்லது தாங்கள் உண்மையானதாகக் கருதும் அதே நேரத்தில் பிறர் முழுமையற்றதாகவோ தவறாக வழிநடத்தக்கூடியதாகவோ கருதும் தகவல்களை மக்கள் பகிர்வார்கள்.
அத்தகைய பேச்சு எந்தளவு பொதுவானது என்பதை உணர்ந்து, தவறாக வழிநடத்தும் அல்லது குழப்பும் உள்ளடக்கம் இருக்கும் வாய்ப்புள்ளபோது உதவிகரமான தகவல்களைப் பயனர்களுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, எங்கள் தளங்களில் உள்ள மிகவும் வைரலான பகிர்வுகளைச் சரிபார்க்கவும் மதிப்பிடவும் அமெரிக்காவிற்கு வெளியே உலகின் பல பகுதிகளில் மூன்றாம் தரப்பு உண்மை நிலை சரிபார்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் (இங்கே பாருங்கள் மற்றும் அமெரிக்காவில் எங்கள் அணுகுமுறையைத் தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்). அமெரிக்காவில் தொடங்கி, தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய Facebook, Instagram மற்றும் Threads பதிவுகள் (இங்கே பாருங்கள்) பற்றி மேலும் முக்கிய விவரத்தைச் சேர்க்க சமூகக் குறிப்புகள் திட்டமானது பயனர்களை அனுமதிக்கிறது. மக்கள் தாங்கள் எதைப் படிக்க, நம்ப மற்றும் பகிர வேண்டும் என்பதை அவர்களாகவே தீர்மானிப்பதற்கு ஏதுவாக மீடியா மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிக்க, தகவல் வளங்களை வழங்குவோம். டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நிஜப்புகைப்படக் கலைநயமிக்க வீடியோ அல்லது நிஜ ஒலித்திறன் கொண்ட ஆடியோவுடன் இயல்பான படைப்புகளை அவர்கள் பதிவிடும்போது, எங்களது AI வெளியீட்டுக் கருவி மூலம் மக்கள் வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம், அவ்வாறு அவர்கள் செய்யத் தவறும்பட்சத்தில் நாங்கள் அபராதம் விதிக்கக்கூடும். பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் மக்களைத் தவறாக வழிநடத்தும் அதிக ஆபத்தை உருவாக்கும், டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட குறிப்பிட்ட சில படைப்புகளிலும் லேபிளை நாங்கள் சேர்க்கலாம்.
இறுதியாக, தவறான தகவல் பரவலுடன் அடிக்கடி ஒத்துப்போகும் பிற பகுதிகளில் பகிர்வுகள் மற்றும் நடத்தையைத் தடைசெய்கிறோம். எடுத்துக்காட்டாக, போலியான கணக்குகள், மோசடி மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அனுமதிக்கப்படாத நடத்தையை எங்கள் சமூகத் தரநிலைகள் தடைசெய்கின்றன.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூழல்கள் தொடர்ந்து மாறியும் வளர்ந்தும் வருகையில் இந்தக் கொள்கைகளையும் தொடர்ந்து மேம்படுத்துவோம். கீழே பட்டியலிடப்பட்ட தவறான தகவலைத் தொடர்ந்து பகிரும் கணக்குகளின் பகிர்வுகள் இந்தக் கொள்கைக்கு இணங்க அகற்றப்படுவதுடன், அதன் விநியோகம் குறைக்கப்படலாம், விளம்பரப்படுத்தும் அதன் திறனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது எங்கள் பிளாட்பார்ம்களில் இருந்து அது அகற்றப்படலாம். படைப்புகளை Meta அகற்றியதும் என்ன நடக்கும் என்பது பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்.
வழிகாட்டுதல்கள்
நாங்கள் அகற்றும் தவறான தகவல்:
பின்வரும் வகையிலான தவறான தகவல்களை அகற்றுவோம்:
I. உடல் சார்ந்த தீங்கு அல்லது வன்முறை
மக்களுக்கு உடனடி வன்முறை அபாயம் அல்லது உடல் சார்ந்த தீங்கிற்கு நேரடியாகப் பங்களிக்க வாய்ப்புள்ள, வல்லுநர் கூட்டாளர்கள் கண்டறிந்துள்ள தவறான தகவலையோ சரிபார்க்க முடியாத வதந்திகளையோ அகற்றுவோம். தவறான தகவல் என்பது ஓர் அதிகாரப்பூர்வ மூன்றாம் தரப்பால் போலியானது எனக் கண்டறியப்பட்டது எனும் கூற்றுடன் உள்ள பகிர்வுகள் என வரையறுக்கிறோம். சரிபார்க்க முடியாத வதந்தி என்பது, முதலில் யார் கூறினார்கள் என்பதைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமான அல்லது சாத்தியமற்ற கூற்று என வல்லுநர் கூட்டாளர்கள் உறுதிப்படுத்துவது ஆகும், அதில் அதிகாரப்பூர்வமாக யார் கூறினார்கள் என்பது இருக்காது, கூற்றை நீக்குவதற்கான போதுமான விவரம் இருக்காது அல்லது அதில் கூறப்படும் கூற்று மிகவும் நம்பமுடியாத வகையிலோ முரண்பாடான வகையிலோ இருக்கும்.
சில நேரங்களில், தீங்கற்றதாகத் தோன்றக்கூடிய தவறான தகவல் சில சூழல்களில் இறப்பு, கடுமையான தீங்கு அல்லது பிற உடல் சார்ந்த தீங்கு போன்ற அதீத அபாயத்திற்குப் பங்களிக்கும் வன்முறை அச்சுறுத்தல்கள் உட்பட உடல் ரீதியான தீங்கை ஏற்படுத்தும் அபாயத்திற்குப் பங்களிக்கலாம். அரசுசாரா நிறுவனங்கள் (NGOகள்), இலாபநோக்கமற்ற அமைப்புகள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் இந்த உள்ளூர் விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அமைப்புகளின் உலகளாவிய நெட்வொர்க் உடன் பணியாற்றுகிறோம்.
சமூக வன்முறையின் அதிக ஆபத்தை அனுபவிக்கும் நாடுகளில், எந்தத் தவறான கூற்றுகள் உடனடி உடல் சார்ந்த தீங்கிற்கு நேரடியாகத் தீங்கு விளைவிப்பதற்குப் பங்களிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள உள்ளூர் கூட்டாளர்களுடன் தீவிரமாக வேலை செய்கிறோம். பிறகு எங்கள் தளத்தில் அத்தகைய கூற்றுகளை மேற்கொள்ளும் பகிர்வுகளை அடையாளங்காணவும் அகற்றவும் வேலை செய்கிறோம். எடுத்துக்காட்டாக, உள்ளூர் வல்லுநர்களின் ஆலோசனையில், வன்முறைச் செயல்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடுபவர்கள், ஆயுதங்கள் அல்லது இராணுவ சாதனங்களைச் சித்தரிப்பதாக பொய்யாகக் கூறும் சூழலுக்கு அப்பாற்பட்ட ஊடகங்களை நாங்கள் அகற்றலாம்.
II. ஆரோக்கியம் தொடர்பாக தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்
பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு உடனடி தீங்கை ஏற்படுத்த நேரடியாகப் பங்களிக்க வாய்ப்புள்ள ஆரோக்கியம் சார்ந்த தவறான தகவலை அடையாளங்காண முன்னணி சுகாதார அமைப்புடன் ஆலோசனை நடத்துவோம். அகற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய தவறான தகவலில் அடங்குபவை:
  • தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல். பொதுச் சுகாதார அதிகாரிகள் தவறானது மற்றும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதற்கு நேரடியாக பங்களிக்கும் வாய்ப்புள்ளது என தீர்மானிக்கும்போது, தடுப்பூசிகள் பற்றிய முதன்மையான தவறான தகவலை அகற்றுவோம். அவற்றில் உள்ளடங்குபவை:
    • தடுப்பூசிகள் ஆட்டிசத்தை உண்டாக்கும் (எகா: “தடுப்பூசிகள் அதிகமாகப் போடப்பட்டதாலே பல குழந்தைகள் தற்போது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”)
    • கைக்குழந்தை திடீரென மரணிக்கும் நோயைத் தடுப்பூசிகள் உண்டாக்கும் (எகா: “தடுப்பூசிகளால் SIDS ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா?”)
    • தடுப்பூசிகள் அவை பாதுகாப்பளிக்கின்ற நோய்களை உண்டாக்குகின்றன அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன (எகா: “தடுப்பூசியில் நோயின் உருமாறிய வைரஸ் இருப்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். எச்சரிக்கையாக இருங்கள்!”)
    • தடுப்பூசிகளோ அதிலுள்ள உட்பொருட்களோ உயிருக்கு ஆபத்தானவை, நச்சுத்தன்மை உடையவை, விஷத்தன்மை கொண்டவை, தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்லது அபாயகரமானவை (எகா: “உங்களுடைய உடலில் விஷத்தைச் செலுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுங்கள்.”)
    • இயற்கையான எதிர்ப்புச்சக்தியானது தடுப்பூசியால் பெற்ற எதிர்ப்புச்சக்தியைக் காட்டிலும் பாதுகாப்பானது (எகா: “தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைக் காட்டிலும் நோயைப் பெறுவது பாதுகாப்பானது”.)
    • மருத்துவ ரீதியாகப் பரிந்துரைக்கப்பட்டாலும் குறுகிய கால அளவில் அதிக அளவு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது ஆபத்தானது (எகா: “உங்கள் மருத்துவர் என்ன கூறினாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை, ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டாம், அது ஆபத்தானது!”)
    • தடுப்பூசிகள் பாதுகாப்பளிப்பதாகக் கூறும் நோய்க்கு எதிராக எவ்வித தாக்கத்தையும் உண்டாக்குவதில்லை. எனினும் COVID-19, காய்ச்சல் மற்றும் மலேரியா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் ஒருவர் வைரஸால் பாதிக்கப்படமாட்டார் என கருதமுடியாது என்று கூறும் கூற்றுகளை நாங்கள் அகற்றுவதில்லை. (எகா: அகற்றுக – “நீங்கள் நோயால் பாதிக்கப்படுவதிலிருந்து போலியோ தடுப்பு மருந்துகள் தடுப்பதில்லை”; அகற்றுக – “நீங்கள் நோய்களால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுப்பூசிகள் தடுப்பதில்லை”; அனுமதி – “தடுப்பூசியானது COVID-19 ஏற்படுவதிலிருந்து தடுக்காது, எனவேதான நீங்கள் மக்கள் நிறைந்த இடங்களில் சமூக இடைவெளியையும் முகக் கவசம் அணிவதையும் கடைப்பிடிக்க வேண்டும்.”)
    • தட்டம்மையால் பாதிக்கப்படுவது மரணத்தை ஏற்படுத்தாது (கூடுதல் தகவல்கள் மற்றும்/அல்லது சூழல் தேவைப்படுகின்றது) (எகா: “தட்டம்மையால் பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படாதீர்கள், அதனால் மரணம் ஏற்படாது.”)
    • நோய்பாதிப்புகளில் இருந்து தடுப்பூசிகள் எந்தளவிற்கு செயல்படுகின்றனவோ அதே அளவு வைட்டமின் சி ஆனதும் செயல்படுகின்றது.
  • பொதுச் சுகாதார அவசரநிலைகளின்போது ஆரோக்கியம் பற்றிய தவறான தகவல். பொதுச் சுகாதார அவசரநிலைகளின்போது, தகவல்கள் தவறானது மற்றும் தனிநபர்கள் தீங்கிழைக்கும் நோயைப் பெறுவதற்கோ பரப்புவதற்கோ பங்களிப்பது அல்லது தகுந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுப்பது உட்பட உடல்ரீதியில் உடனடித் தீங்கை ஏற்படுத்தும் அபாயத்திற்கு நேரடியாகப் பங்களிக்க வாய்ப்புள்ளது என பொதுச் சுகாதார அதிகாரிகள் முடிவுசெய்யும்போது தவறான தகவல்களை அகற்றுவோம். உலகளாவிய மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளுடன் கூட்டிணைந்து பொதுச் சுகாதார அவசரநிலைகளை அடையாளங்காணுகிறோம்.
  • ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய மந்திர தந்திர மருந்துகளை விளம்பரப்படுத்துதல் அல்லது அவற்றுக்கு ஆதரவாகப் பேசுதல். இவற்றில் சுகாதாரச் சூழலில் கடுமையான தீங்கு அல்லது இறப்பை ஏற்படுத்தும் அபாயத்திற்கு நேரடியாகப் பங்களிக்கும் வாய்ப்புள்ள பரிந்துரைக்கப்பட்ட உபயோகமுள்ள சிகிச்சைகளும் முறையான சுகாதார உபயோகம் அல்லாத சிகிச்சையும் அடங்கும் (எகா: பிளீச், கிருமிநாசினி, பிளாக் ஸ்லேவ், காஸ்டிக் சோடா).
III. வாக்காளர் அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு இடையூறு
தேர்தல் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் முயற்சியில், அந்தச் செயல்முறைகளில் பங்கேற்கும் மக்களின் திறனுடன் நேரடியாக இடையூறு அபாயத்திற்குப் பங்களிக்க வாய்ப்புள்ள தவறான தகவலை அகற்றுவோம். இதில் பின்வருபவை அடங்கும்:
  • தேதிகள், இடங்கள், நேரம், வாக்களிக்கும் முறை அல்லது வாக்காளர் பதிவு அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்பதைப் பற்றிய தவறான தகவல்
  • யாரெல்லாம் வாக்களிக்கலாம், வாக்களிப்பதற்கான தகுதிகள், வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா இல்லையா என்ற தகவல்கள் மற்றும் வாக்களிப்பதற்கு என்ன தகவல்கள் அல்லது ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும் ஆகியவற்றைப் பற்றிய தவறான தகவல்.
  • வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறாரா அல்லது இல்லையா என்பது பற்றிய தவறான தகவல்.
  • யாரெல்லாம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கலாம் மற்றும் பங்கேற்பதற்கு என்னென்ன தகவல்கள் அல்லது ஆவணங்கள் வழங்க வேண்டும் என்பது பற்றிய தவறான தகவல்.
  • மக்கள்தொகை கணக்கெடுப்பில் அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் பற்றிய தவறான தகவல்கள். இதில் பொருந்துமெனில், தனிநபரின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்களை மற்றொரு (மக்கள்தொகை கணக்கெடுப்பு சாராதது) அரசு நிறுவனத்திடம் பகிர்வதும் அடங்கும்.
  • பின்வருவதைப் பற்றிய தவறான அல்லது உறுதிசெய்யப்படாத கூற்றுகள்: அமெரிக்கா குடிபெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) ஆனது வாக்களிக்கும் இடத்தில் உள்ளது.
  • வாக்களிக்கும் செயல்முறையில் பங்கேற்பவர்கள் COVID-19 நோயினால் (அல்லது வேறு தொற்றுநோயால்) பாதிக்கப்படுவார்கள் என வெளிப்படையாகத் தெரிவிக்கும் தவறான கூற்றுகள்.
  • வாக்களிக்கப்பதைச் சாத்தியமற்றதாக்குவதாக தேர்தல் அதிகாரியால் உறுதிசெய்யப்பட்ட, அமெரிக்க வாக்களிப்பு இடத்தில் உள்ள தற்போதைய நிலைமைகளைப் பற்றிய தவறான கூற்றுகள்.
வன்முறைக்கு அழைத்தல், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட ஊக்குவித்தல், தேர்தல்களில் ஒன்றிணைந்து இடையூறை ஏற்படுத்துவதற்கு அழைத்தல் ஆகியவற்றுக்காகக் கூடுதல் கொள்கைகள் உள்ளன, இவை எங்கள் சமூகத் தரநிலைகளின் பிற பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளன.
பின்வரும் பகிர்வுக்கு, தகவலளிக்கும் லேபிளைச் சேர்த்துள்ளோம்:
மாற்றியமைக்கப்பட்ட மீடியா
பல்வேறு முறைகளில் மீடியாவை எடிட் செய்யலாம். பெரும்பாலான சூழல்களில், இந்த மாற்றங்கள் கலைநயக் காரணங்களுக்காக பகிர்வுகள் செதுக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவது அல்லது இசை சேர்க்கப்படுவது போன்று தீங்கு ஏற்படுத்தாத வகையில் இருக்கும். மற்ற சூழல்களில், இந்த மாற்றம் வெளிப்படையானதாக இருக்காது மற்றும் தவறாக வழிநடத்தலாம்.
  • தவறாக வழிநடத்தக்கூடிய வகையில், டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட பகிர்வு. சமூகத் தரநிலைகளை மீறாத படைப்புக்கு, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட அல்லது பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் பொது மக்களைக் குறிப்பிடத்தக்க அளவில் ஏமாற்றும் அதிக அபாயத்தை உருவாக்குகின்ற தத்ரூபமான படம்/வீடியோ அல்லது தத்ரூபமான ஆடியோவாகப் படைப்புகள் உள்ள போது படைப்புகளின் முகப்பில் தகவல் லேபிளை நாங்கள் வைக்கலாம் அல்லது விளம்பரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளை ரத்துசெய்யலாம்.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
தவறான தகவல் தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்