Meta அறிவுசார் சொத்து மற்றும் உரிமைகளைப் பயன்படுத்துவது

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
Meta அதன் அறிவுசார் சொத்து உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் முறையான பயன்பாட்டுக்குச் சரியாகப் பொருந்தும் உதவி ஆதாரங்களை நியமிக்கிறது. இந்தக் கொள்கை Metaவின் அறிவுசார் சொத்து சட்டவிரோதமாகவோ, எழுத்துப்பூர்வ முன்னனுமதியில்லாமலோ, எங்கள் பிராண்டு உதவி மையத்துடன் இணக்கமற்ற முறையிலோ பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது.
இவற்றைச் செய்யும் படைப்பைப் பதிவிட வேண்டாம்:
  • பிராண்டு உபயோகம்:
    • Metaவின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் அல்லது Meta பிராண்டு உதவி மையத்தால் தடைசெய்யப்பட்ட முறையில் அதன் பதிப்புரிமைகள் அல்லது வர்த்தகச் சின்னங்களைப் பயன்படுத்துவது.
    • படைப்பின் மிகவும் தனித்துவமான அல்லது முக்கியமான அம்சமாக இருக்கும் வகையில் ஏதேனும் Meta பிராண்டுகளைக் குறிப்பிடுவது.
    • வடிவமைப்பையோ நிறத்தையோ மாற்றுவது அல்லது ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் அல்லது அனிமேஷனில் பயன்படுத்துவது போன்று Meta பிராண்டு உடைமைகளை ஏதேனும் வழியில் மாற்றுவது.
  • பிராண்டு ஆதரவு:
    • Metaவின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் ஏதேனும் Meta பிராண்டுகளுடனும் எந்த வகையிலாவது ஆதரவு அல்லது கூட்டிணைப்பு உள்ளதாகக் குறிப்பிடுவது.
    • Metaவின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் ஏதேனும் Meta பிராண்டுகள் (Facebook, Instagram அல்லது WhatsApp), தொழில்நுட்பம் அல்லது திட்டத்தின் ஆதரவு அல்லது உதவி உள்ளதாகக் குறிப்பிடுவது.
  • பின்வரும் வழிகளில் ஏதேனும் தயாரிப்புகளின் பயனர் இடைமுகத்தைச் சித்தரிப்பது:
    • தயாரிப்புகளின் தற்போதைய தோற்றம், அம்சங்கள் அல்லது செயல்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பது.
    • ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள், குறுக்கீடு அல்லது அனிமேஷனைச் சேர்ப்பது போன்ற ஏதேனும் வழியில் பயனர் இடைமுகத்தை மாற்றியமைப்பது.
    • பயனர் இடைமுகத்தின் கூறுகளைத் தனித்தனியாகவோ அல்லது தனிநபராகவோ பயன்படுத்துவது
    • மொபைல் அல்லது டெக்ஸ்டாப் போன்ற தொடர்புடைய சாதனச் சூழலில் பயனர் இடைமுகத்தைச் சித்தரிக்காமல் இருப்பது.
  • Metaவின் இசை உரிமை ஒப்பந்தங்களை மீறும் வகையில் இசையையோ பிற படைப்புகளையோ பயன்படுத்துவது.
  • எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் Metaவிற்குச் சொந்தமான மற்றும்/அல்லது பிரத்தியேக உரிமை கொண்டிருக்கும் Facebook Watch படைப்பை ஸ்ட்ரீம் செய்வது.
  • எழுத்துப்பூர்வமான முன் அனுமதி இல்லாமல் Metaவிற்குச் சொந்தமான அறிவுசார் சொத்துரிமைகளைப் பயன்படுத்துவது.
  • Metaவின் வர்த்தகச் சின்னங்களைப் போல் இருப்பதாகக் குழப்பக்கூடிய சின்னங்களைப் பயன்படுத்துவது.
இவற்றை அகற்றுவோம்:
  • அகற்றிய பிறகு புதிய கணக்குகளை உருவாக்குவது உள்ளிட்ட இந்தக் கொள்கையைத் தொடர்ச்சியாக விதிமீறும் கணக்குகள்.
பின்வரும் வழியில் Metaவிற்குச் சொந்தமான மற்றும்/அல்லது உரிமம் உடைய அறிவுசார் சொத்துரிமைகளைப் பயன்படுத்தும் படைப்புகளை அனுமதிப்போம்:
  • Metaவினால் எழுத்துப்பூர்வமாக வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டிருப்பது மற்றும்/அல்லது
  • Meta பிராண்டு உதவி மையத்தில் உள்ள வழிகாட்டிகளுடன் இணக்கமாக இருப்பது.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
Meta அறிவுசார் சொத்து மற்றும் உரிமங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக உதவி பெறுவது
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்