மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்து தொடர்பான மீறல்

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
Meta அறிவுசார் சொத்துரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, சமூகத்தின் நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்ட இடத்தில் கருத்து, படைப்புத்திறன் மற்றும் புதுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உறுதிகொண்டுள்ளது.
இந்தக் காரணத்திற்காக, பதிப்புரிமை, வர்த்தகச் சின்னம் அல்லது பிற சட்ட உரிமைகள் உட்பட மற்றொருவரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் படைப்பிற்கு எதிராகக் கொள்கையைச் செயல்படுத்தியுள்ளோம். எங்கள் அறிவுசார் சொத்து வெளிப்படைத்தன்மை அறிக்கையில் நாங்கள் பெறும் அறிவுசார் சொத்து புகார்கள் பற்றிய தகவல்களை வெளியிடுகிறோம்.
உங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக நீங்கள் நினைக்கும் படைப்புகளைப் புகாரளிக்க, எங்கள் அறிவுசார் சொத்து உதவி மையம், பிசினஸ் பாதுகாப்புப் பக்கம் ஆகியவற்றிற்குச் செல்லுங்கள் அல்லது பிராண்டு உரிமைகள் பாதுகாப்புக்கான அணுகலுக்கு விண்ணப்பிக்க முயலுங்கள்.
உரிமை வைத்திருப்பவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடமிருந்து புகாரைப் பெற்ற பிறகு, பின்வருவனவற்றில் ஈடுபடும் படைப்புகளை அகற்றுவோம் அல்லது தடுப்போம்:
  • பதிப்புரிமை மீறல்.
  • வர்த்தகச் சின்ன மீறல்.
  • போலியான தயாரிப்புகளின் விற்பனை அல்லது விளம்பரம்
  • பிராண்டு(கள்) உடன் கூட்டு இருப்பதாகப் பொய் கூறுதல்
  • அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது பிற சொத்துரிமைகளின் பிற விதிமீறல் அல்லது மீறல்
இதுபோன்ற படைப்பையும் அகற்றுவோம்:
  • பிராண்டடு தயாரிப்புகளின் போலியான தயாரிப்புகளைப் படைப்பு விற்பதாக அல்லது விளம்பரம் செய்வதாக பரிந்துரைக்கும் அடையாளங்களைக் கொண்டவை
  • போலியான தயாரிப்புகள் என சந்தேகிக்கப்படுபவற்றின் விற்பனை அல்லது விளம்பரத்திற்குப் பிரத்தியேகமாக உள்ள வலைதளங்களுக்கான (தளங்களுக்கு வெளியில் இருப்பவை) இணைப்புகளைக் கொண்டவை
  • உரிமைகளை வைத்திருப்பவரால் போலியானது என முன்பே புகாரளிக்கப்பட்ட படைப்பைப் போன்றுள்ள அல்லது அதனுடன் மிகவும் ஒத்துப்போகின்ற, சந்தேகிக்கப்பட்ட போலியான தயாரிப்புகளை விற்பனை செய்யும் அல்லது விளம்பரப்படுத்தும் படைப்பு
  • பதிப்புரிமையை மீறுவதாகச் சந்தேகிக்கப்படுபவற்றைப் பகிரும், விளம்பரப்படுத்தும், ஆதரிக்கும் படைப்புகள்
இவ்வாறாக இருக்கும் கணக்குகளை அகற்றுகிறோம்:
  • இந்தக் கொள்கையைத் தொடர்ந்து மீறுகின்றவை.
உரிமைகளை வைத்திருப்பவரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செயலில் உள்ள நியாயமான பயன்பாட்டிற்கான கொள்கைகளைப் பின்தொடரும் படைப்பை அனுமதிக்கிறோம்
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்து தொடர்பான மீறலுக்கு உதவி பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்