அனுமதிக்கப்படாத நடத்தை

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
அனுமதிக்கப்படாத நடத்தை என்பது சமூகத் தரநிலைகளின் கீழ் செயலாக்கத்தைத் தவிர்க்க, Meta அல்லது எங்கள் சமூகத்தை ஏமாற்றும் நோக்கில் ஒருவர் அல்லது பலர் கட்டுப்படுத்தும் அனுமதிக்கப்படாத உடைமைகளின் நெட்வொர்க் மேற்கொள்ளும் பல்வேறு வகையான ஏமாற்றும் சிக்கலான வடிவங்களைக் குறிக்கிறது.
பாதக அச்சுறுத்தலில் ஈடுபடுபவர்கள், அனுமதிக்கப்படாத நடத்தையின் மேம்பட்ட வடிவங்களில் ஈடுபட தவறான அடையாளங்களைப் பயன்படுத்தும் சூழல்களில், நாங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அனுமதிக்கப்படாத நடத்தை (CIB- Coordinated Inauthentic Behavior) என விவரிக்கும் நடத்தையில் ஈடுபடுகின்றனர்.
இந்தச் செயலாக்க நடவடிக்கைகள் மற்றும் தரநிலைகள் படைப்பு அல்லது சித்தாந்தம் எப்படியாக இருப்பினும் பொருந்தும், மேலும் மக்கள் தாங்கள் தொடர்புகொள்ளும் மக்களையும் சமூகங்களையும் நம்பக்கூடிய ஒரு இடத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நெட்வொர்க்குகளை நாங்கள் கண்டறியும்போது, போலியான கணக்குகள், பக்கங்கள், குழுக்கள் அல்லது செயல்பாட்டில் நேரடியாக ஈடுபட்ட பிற Meta உடைமைகளை நீக்குவோம். விதிமீறுகின்ற நடத்தையில் ஈடுபடாத நம்பகமான அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பக்கங்கள், குழுக்கள் அல்லது சமூகங்களை இவர்களும் உருவாக்கும், நிர்வகிக்கும், இணை நிர்வகிக்கும், இலக்கிடும் அல்லது கட்டுப்படுத்தும் சூழல்களில், விதிமீறும் நபர்களை நீக்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். இருப்பினும் எங்கள் சேவைகளில் தொடர்ந்து இருப்பதற்கு செயலில் ஈடுபடாத நபர்களையும் சமூகங்களையும் அனுமதிக்கலாம்.
சாத்தியமான சூழலில், இங்கே கிடைக்கும் எங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கான தடுப்பு நடவடிக்கைக்கான அறிக்கைகளில் CIB இன் நெட்வொர்க்குகள் பற்றிய எங்கள் கண்டறிதல்களைப் பகிர்கிறோம். இந்த அறிக்கைகள் அனுமதிக்கப்படாத நடத்தை தொடர்பான கொள்கைகளின் கீழ் செயலாக்கங்களின் ஒட்டுமொத்த உலகத்தை அடக்கும் நோக்கிலானவை அல்ல. ஆனால் இந்த இடத்தில் நாங்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்களின் அதிகரிப்பைப் பற்றிய நமது சமூகத்தின் புரிதலைத் தெரிவிக்க உதவுகின்றன.
பின்வருபவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருபவற்றிற்காக அனுமதிக்கப்படாத Meta உடைமைகளின் உருவாக்கம், உபயோகம் அல்லது கிளைம் செய்த உபயோகம்:
  • பின்வருபவை பற்றி Meta அல்லது எங்கள் பயனர்களை ஏமாற்றுவது: பார்வையாளர்கள் அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தின் அடையாளம், நோக்கம் அல்லது தொடக்கம்
  • சமூகத் தரநிலைகளின் கீழ் செயலாக்கத்தைத் தவிர்ப்பது.
  • பிறரைத் துன்புறுத்த, ஒடுக்க அல்லது கருத்தைப் பகிர்வதைத் தடுக்க Meta புகாரளித்தல் அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல்.
பின்வரும் சமூகத் தரநிலைகளுக்கு, பின்வருபவற்றைச் செயல்படுத்தக் கூடுதல் தகவல்கள் மற்றும்/அல்லது சூழல் எங்களுக்கு வேண்டும்:
பின்வருபவற்றை அனுமதிக்க மாட்டோம்:
  • ஒருங்கிணைக்கப்பட்ட அனுமதிக்கப்படாத நடத்தையில் ஈடுபடும் அல்லது ஈடுபடுவதாக கூறப்படும் நிறுவனங்கள், இவை அனுமதிக்கப்படாத நடத்தையின் வடிவங்கள் என வரையறுக்கப்படுகின்றன. இவற்றில் தவறான அடையாளங்கள் செயல்பாட்டின் மையமாக இருக்கின்றன மற்றும் செயல்பாட்டாளர்கள் கண்டறிவதில் இருந்து தப்பிப்பதற்கும் நம்பகமானவராகத் தோன்றுவதற்கும் பாதகமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர்; மற்றும்
  • வெளிநாட்டுக் குறுக்கீட்டில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபடுவதாகக் கூறுகின்ற நிறுவனங்கள். இவை ஒருங்கிணைக்கப்பட்ட அனுமதிக்கப்படாத நடத்தை என்று வரையறுக்கப்படுகிறது. இதில் செயலாக்கம் இலக்கிடும் பார்வையாளர்கள் இருக்கும் அதே நாட்டில் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் இருக்க மாட்டார்கள்
  • ஐநா சாசனத்தின் சட்டப்பிரிவு 2(4)ஐ மீறும் வகையில் எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மற்றொரு அரசின் மீது தாக்குதல் நடத்தும் சூழலில் இராணுவத்தைப் பயன்படுத்துவது அல்லது வன்முறை நிகழ்வுகளை மறுக்க தனது அதிகாரப்பூர்வத் துறைகள், ஏஜென்சிகள் மற்றும் தூதரகங்களைப் பயன்படுத்துவதற்குச் சமூக ஊடகத்தை நீண்ட காலத்திற்குத் தடைசெய்ய ஆணையிடும் அரசாங்கங்கள்.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
அனுமதிக்கப்படாத நடத்தை தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்