இணையப் பாதுகாப்பு

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
எங்கள் பயனர்களின் பாதுகாப்பு என்பது அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், கணக்குகள், சுயவிவரங்கள், அவர்கள் நிர்வகிக்கக்கூடிய பிற Meta கணக்குகள் மற்றும் எங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பையும் உள்ளடக்கியது என்பதை அறிவோம். முக்கியமான தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க முயல்வது அல்லது ஏமாற்றும் அல்லது கையகப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத வழியில் அணுகும் செயல்களில் ஈடுபடுவது ஆகியவை நாங்கள் பராமரிக்க விரும்புகின்ற நம்பத்தகுந்த​​, திறந்தநிலை மற்றும் பாதுகாப்பான சூழலுக்கு ஆபத்தாக உள்ளன.
பின்வருபவற்றை அனுமதிக்க மாட்டோம்:
பின்வருபவை உட்பட, அங்கீகரிக்கப்படாத வழிகளில் கணக்குகளைத் திருடவோ அணுகவோ முயற்சிப்பது:
  • ஏமாற்றும் வழிகளில் அல்லது கணக்கு, சுயவிவரம் அல்லது அமைப்பு உரிமையாளரின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் ஒருவருக்குச் சொந்தமில்லாத கணக்குகள், சுயவிவரங்கள் அல்லது Meta அமைப்புகளை அணுகுவது.
  • பின்வரும் வழிகள் உட்பட, அங்கீகரிக்கப்படாத நோக்கத்திற்காக மற்றொரு பயனரின் உள்நுழைவுத் தகவல்கள், தனிப்பட்ட தகவல்கள் அல்லது பிற முக்கியமான பயனர் தகவல்களைப் பெறுவது, உரிமையை அடைவது அல்லது கோரிக்கை செய்வது:
    • ஃபிஷிங், இது முக்கியமான பயனர் தகவல்களைப் மோசடியாகப் பெறும் நோக்கத்திற்காக, பார்ப்பதற்கு மிகவும் நம்பகமான அல்லது மதிப்புமிக்க தகவல்தொடர்புகள் அல்லது வலைதளங்கள் போல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட தகவல் தொடர்புகள்/ வலைதளங்களை உருவாக்கும் செயல்கள் என வரையறுக்கப்படுகின்றது.
    • சமூகப் பொறியியல், அதாவது பொதுவான கணக்கு அல்லது கடவுச்சொல் மீட்பு கேள்விகளுக்கான பதில்களைச் சேகரிக்க அல்லது பெற தொடர்ச்சியாகவோ நிலையாகவோ முயற்சிப்பது போன்றவை.
    • கீழே விவரிக்கப்பட்டுள்ளவாறு தீப்பொருள், தேவையற்ற விஷயங்கள், உளவுப் பொருள் அல்லது பிற தீங்கிழைக்கும் குறியீடு.
பின்வருபவை உட்பட, தீங்கிழைக்கும் அல்லது பாதிப்பை உண்டாக்கும் குறியீட்டைப் பகிரவோ, உருவாக்கவோ, ஹோஸ்ட் செய்யவோ, விநியோகிக்கவோ முயல்வது:
  • பின்வருபவை உட்பட (ஆனால் அவை மட்டுமில்லாமல்), பயனரின் ஆன்லைன் அல்லது தகவல் பாதுகாப்பைப் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கோப்புகள், செயலிகள் அல்லது புரோகிராம்களைப் பதிவிறக்கவோ செயல்படுத்தவோ பயனர்களை ஊக்குவிப்பது அல்லது ஏமாற்றுவது.
    • தீப்பொருள், இது சிஸ்டங்களைப் பாதிக்கவோ அவற்றுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறவோ வடிவமைக்கப்பட்ட குறியீடு அல்லது மென்பொருள் என வரையறுக்கப்படுகிறது. கணினி சிஸ்டங்களைப் பாதிக்க வடிவமைக்கப்பட்ட புரோகிராம்கள் மற்றும் ரேன்சம்வேர் போன்ற மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குவதற்கு வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஆகியவை இதிலடங்கும்.
    • உளவுப்பொருள், இது பயனர்களிடம் இருந்து தகவலைச் சேகரித்து, அவரிடம் அனுமதி பெறாமல் மூன்றாம் தரப்பினரிடம் பகிரும் அல்லது தவறான நோக்கங்களுக்குத் தகவல்களைப் பயன்படுத்தும் (எ.கா: பாலியல் ரீதியான மிரட்டல், வற்புறுத்துவது, சிஸ்டங்களைத் தவறாக அணுகுவது) குறியீடு அல்லது மென்பொருள் என வரையறுக்கப்படுகிறது.
    • தேவையற்ற விஷயங்கள், இது வன்பொருள் அல்லது மென்பொருளை உபயோகிப்பதை முக்கியமற்றதாக மாற்றும், கணினி அல்லது நெட்வொர்க்கில் இருந்து அகற்றுவதற்கு கடினமாக இருக்கக்கூடிய குறியீடு அல்லது மென்பொருள் என வரையறுக்கப்படுகிறது.
  • எங்களது பயனர்கள் அல்லது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆபத்திற்குள்ளாக்கும் பிளாட்பார்மிலோ அதற்கு வெளியிலோ உலாவி நீட்டிப்புகள் மற்றும் மொபைல் செயலிகள் உட்பட தீங்கிழைக்கும் மென்பொருளை உருவாக்குதல், பகிர்தல் அல்லது ஹோஸ்ட் செய்தல்.
  • மென்பொருள் அல்லது அனுமதிச் சான்றுகளை ஹேக்கிங் செய்ய ஊக்குவிக்கும் மென்பொருள் உட்பட, பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்க மக்களை அனுமதிக்கும் மென்பொருளையோ, பாடத்திட்டங்களையோ, தயாரிப்புகளையோ பகிர்வது அல்லது விளம்பரம் செய்வது உட்பட ஹேக்கிங் செய்வதாக அச்சுறுத்துவது, அதை ஒப்புக்கொள்வது அல்லது செயல்படுத்துவது
  • முறைகேடான இணைப்புகளை (எங்கள் சேவைகளில் இத்தகைய இணைப்புகளில் பெரும்பாலானவை சமூகத் தரநிலைகளின் ஸ்பேம் அல்லது இணையப் பாதுகாப்பு பிரிவுகளை மீறும்) அனுமதிக்கும் இணைய ஹோஸ்டிங் சேவைகள், டொமைன் பெயர் சிஸ்டம் சர்வர்கள் மற்றும் விளம்பர நெட்வொர்க்குகள் உட்பட ஆன்லைன் கட்டமைப்பை வழங்குதல்.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
இணையப் பாதுகாப்பு தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்