ஒருங்கிணைந்து தீங்கு செய்தல் மற்றும் குற்றத்தை ஊக்குவித்தல்

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
உடல் ரீதியான தீங்கு மற்றும் போலி நடத்தையை தடுக்கும் மற்றும் இடைநிறுத்தும் முயற்சியாக நபர்கள், பிசினஸ்கள், சொத்து அல்லது விலங்குகள் மீதான இலக்கிடப்பட்ட, குறிப்பிட்ட குற்ற அல்லது தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பது, ஏற்பாடு செய்வது, விளம்பரப்படுத்துவது அல்லது சம்மதிப்பது போன்றவற்றைச் செய்ய பயனர்களுக்குத் தடைவிதித்துள்ளோம். குற்றம் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்களை விவாதிக்கவும் ஆதரிக்கவும் பயனர்களை அனுமதிக்கிறோம். அத்துடன் அவர்கள் பார்த்த அல்லது எதிர்கொண்ட தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை அல்லது குற்ற நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் அனுமதிக்கிறோம். ஆனால் அவை தீங்கு விளைவிப்பதை ஆதரிக்கவோ ஒருங்கிணைக்கவோ கூடாது.
இவற்றை அகற்றுவோம்:
மக்களைப் பாதிக்கக்கூடியவை
  • அடையாளத்தை வெளிப்படுத்துவது: பின்வரும் நபர்களாகக் கருதப்படும் யாரேனும் ஒருவரின் தொடர்புடைய அடையாளம் அல்லது இருப்பிடங்களை வெளியிடுவது:
    • அடையாளம் வெளியானால் அபாயம் ஏற்படக்கூடிய குழுவின் உறுப்பினராக இருத்தல்; மற்றும்/அல்லது
    • அடையாளம் வெளியானால் அபாயம் ஏற்படக்கூடிய குழுவின் உறுப்பினருடன் குடும்பம் மற்றும்/அல்லது காதல் உறவுகளைக் கொண்டிருத்தல்; மற்றும்/அல்லது
    • அடையாளம் வெளியானால் அபாயம் ஏற்படக்கூடிய குழுவின் ஆதரவாக தொழில்முறை சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டிருத்தல் (அரசியல் நபர்களைத் தவிர்த்து)
  • பகிர்வில் ஏஜென்ட்டின் பெயர், அவரின் முகம் அல்லது பேட்ஜ் மற்றும் பின்வருவனவற்றில் ஏதேனும் இருந்தால், சட்ட அமலாக்கத்துறை, இராணுவம் அல்லது பாதுகாப்பு அதிகாரியின் இரகசிய நிலையை வெளியிடுவது:
    • ஏஜென்ட்டின் சட்ட அமலாக்க நிறுவனம்
    • ஏஜென்ட்டின் சட்ட அமலாக்க நிறுவனம் செயல்படும் விதம்
    • அவரின் இரகசிய நிலை குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடுதல்
  • விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அல்லது கண்டனம் தெரிவித்தல், உண்மையற்ற அல்லது நாடகமான நிகழ்வுகள் அல்லது ஆபத்து சூழல்களில் தவிர்த்து போலியான அவசர கால அழைப்புகளை ஒன்றிணைந்து செய்வது, அதன் மூலம் அச்சுறுத்துவது, அதை ஆதரிப்பது அல்லது அவ்வாறு செய்வதாக ஒப்புக்கொள்வது.
  • விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அல்லது கண்டனம் தெரிவித்தல் ஆகிய சூழல்களில் தவிர்த்து அதிக ஆபத்து கொண்ட பிரபலமடையும் சவாலில் பங்கேற்பதைச் சித்தரித்தல், விளம்பரப்படுத்துதல், வாதாடுதல் அல்லது ஊக்குவித்தல். இந்தச் சூழல்களில் படம் சித்தரிக்கப்படும்போது, ஒரு எச்சரிக்கை லேபிளைச் சேர்ப்போம், இதனால் பகிர்வு அதிகத் தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்பதை மக்கள் அறிவார்கள்:
விலங்குகளுக்குத் தீங்கு விளைவித்தல்
  • பின்வரும் சூழல்கள் தவிர்த்து, விலங்குகளுக்கு உடல் சார்ந்த தீங்கு செய்யும் செயல்களை (எழுத்து, காட்சி அல்லது வாய்மொழி வடிவில்) ஒன்றிணைந்து செய்வது, அவ்வாறு செய்வதாக அச்சுறுத்துவது, அதை ஆதரிப்பது அல்லது செய்ததாக ஒப்புக்கொள்வது:
    • விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அல்லது கண்டனம் தெரிவித்தல்
    • காப்பாற்றுதல்
    • உயிர் பிழைத்தல் அல்லது தற்காப்பு, சக மனிதர் அல்லது விலங்கைப் பாதுகாத்தல்
    • பொய்யான விலங்குச் சண்டைகள் அல்லது போலியாக விலங்குகளைக் காப்பாற்றுதல் ஆகியவற்றைச் சித்தரிக்கும் சூழல்களைத் தவிர்த்து, உண்மையற்ற அல்லது நாடகமான நிகழ்வுகள்
    • வேட்டையாடுதல் அல்லது மீன் பிடித்தல்
    • மத ரீதியாக பலி கொடுத்தல்
    • உணவு தயாரிப்பு அல்லது பதப்படுத்துதல்
    • பூச்சிகள் அல்லது புழுக்கள்
    • கருணைக் கொலை
    • எருதுசண்டை
  • விலங்குகளுக்கு இடையிலான பொய்யான சண்டைகளை ஏற்பாடு செய்தல், அது தொடர்பாக அச்சுறுத்துதல், அதை ஆதரித்தல் அல்லது செய்ததாக ஒப்புக்கொள்தல், ஆகியவையும் விலங்குகளைப் போலியாக மீட்பதைச் சித்தரிக்கும் வீடியோவும் இதிலடங்கும் (விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கண்டனம் தெரிவித்தல் அல்லது பாதுகாத்தல் ஆகிய சூழல்களைத் தவிர்த்து).
சொத்திற்குச் சேதம் ஏற்படுத்துதல்
  • பின்வரும் சூழல்கள் தவிர்த்து அட்டூழியம் அல்லது திருட்டுச் செயல்களை (எழுத்து, காட்சி அல்லது வாய்மொழி வடிவில்) ஒன்றிணைந்து செய்வது, அவ்வாறு செய்வதாக அச்சுறுத்துவது, அதை ஆதரிப்பது அல்லது செய்ததாக ஒப்புக்கொள்வது:
    • விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அல்லது கண்டனம் தெரிவித்தல்,
    • காப்பாற்றுதல்,
    • கற்பனையான அல்லது நடிக்கப்பட்ட நிகழ்வுகள்,
    • தன்னையோ மற்றவரையோ பாதுகாக்கும் சூழலில் செய்ததாக ஒப்புக்கொள்வது
    • போராட்டத்தின்போது அழிவு ஏற்படுத்துவதைச் சித்தரித்தல்,
    • கிராஃபிட்டியைச் சித்தரிப்பது, அல்லது
    • பிறர் செய்த அழிவுகளையும் திருட்டையும் ஆதரித்து பேசுவது.
வாக்காளர் மற்றும்/அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு மோசடி
  • பணம், பரிசுகள், சேவைகள் அல்லது பிற பொருட்கள் மூலம் வாக்குகளை வாங்கவோ விற்கவோ சலுகைகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கண்டனம் தெரிவிக்கும் சூழல்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள், செய்தி அறிக்கைகள் அல்லது நகைச்சுவை அல்லது கிண்டல் நோக்கங்களுக்காக பகிரப்படும் சூழல்கள் விதிவிலக்காக அனுமதிக்கப்படுகின்றன.
  • கண்டனம் தெரிவித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், செய்தி அறிக்கையிடல் அல்லது நகைச்சுவை அல்லது நையாண்டி சூழல்களில் பகிரப்பட்டாலன்றி, வாக்களிப்பில் (எடுத்துக்காட்டாக, இரண்டு முறை வாக்களித்தல் அல்லது உங்களின் வாக்களிக்கும் தகுதியைப் போலியாக உருவாக்குதல்) அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயல்முறையில் (எடுத்துக்காட்டாக, மக்கள்தொகை குறித்த தகவல்கள் அல்லது உங்கள் வீட்டில் எத்தனைப் பேர் உள்ளனர் என்பதைத் தவறாகக் குறிப்பிடுதல்) சட்டவிரோதமாகப் பங்கேற்கும் நோக்கத்தை ஆதரிப்பது, அதற்கான வழிமுறைகளை வழங்குவது அல்லது வெளிப்படுத்துவது.
பின்வரும் பகிர்வுக்கு, பகிர்வானது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதை மக்கள் அறிய எச்சரிக்கை லேபிளைச் சேர்க்கிறோம்:
  • தொடர்புடைய அபாயங்கள் குறித்து கண்டிக்கும் அல்லது விழிப்புணர்வை உண்டாக்கும் சூழலில் பகிரப்படுமெனில், அதிக ஆபத்து நிறைந்த பிரபலமடையும் சவாலைச் சித்திரிக்கும் படங்கள்.
பின்வரும் பகிர்வுக்கு, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பகிர்வைப் பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளோம்:
  • கற்பனைச் சூழல்கள் அல்லது தொழில்முறைச் சூழல்களில் பகிரப்பட்டிருந்தால் தவிர, ஓட்டுநருக்கோ பிற நபர்களுக்கோ உயிருக்கு ஆபத்தான காயங்கள் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகனத்தை ஓட்டும் ஆபத்தான முறைகளைச் சித்தரிக்கும் படங்கள்.
பின்வரும் சமூகத் தரநிலைகளுக்கு, பின்வருபவற்றை அமல்படுத்த கூடுதல் தகவல்கள் மற்றும்/அல்லது சூழல் எங்களுக்கு வேண்டும்:
இவற்றை அகற்றுவோம்:
  • அடையாளத்தை வெளிப்படுத்துவது: ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி, அவர்களை ஆபத்திற்கு உள்ளாக்குவது:
    • LGBTQIA+ உறுப்பினர்கள்
    • முகமறைப்பு அகற்றப்பட்ட பெண்கள்
    • பாலியல் குற்றம் நிகழாத சூழலில் கைதான குற்றம் நிரூபிக்கப்படாத நபர்கள்
    • சட்ட வழக்குகளில் விசாரிக்கப்படும் நபர்கள் (அவரின் ஈடுபாடு பொது மக்களுக்கு வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளபோது)
    • சாட்சிகள், தகவல் அளிப்பவர்கள், ஆர்வலர்கள், விசாரணை செய்யப்படுவர்கள் அல்லது பணயக்கைதிகள்
    • தேசத் துரோகிகள், நம்பகமான அரசாங்க சேனலால் அறிக்கையளிக்கப்படும்போது
    • போர் கைதிகள், ஆயுதச் சண்டை சூழலில்
  • படம் உருவான இடத்தைப் பொது மக்களிடம் தவறாக காட்ட வாய்ப்புள்ள படங்கள், அவை பின்வரும்படி இருந்தால்:
    • சித்தரிக்கப்படுகின்ற நிறுவனமோ அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியோ படத்திற்கு மறுப்புத் தெரிவித்தல், மற்றும்
    • பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ள படங்கள்.
  • பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வதற்கு நோக்கத்திற்கான அறிக்கை, செயல்படுத்துவதற்கான அழைப்பு அல்லது ஊக்கம்:
    • அவசரகால ஊர்திகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற உறுதிப்படுத்தலோ பொது மக்களுக்குக் கிடைக்கும் உறுதிப்படுத்தலோ இருக்கும்போது அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலைத் தடைசெய்தல், இல்லையெனில்
    • அத்தியாவசியத் சேவைகள் அல்லது தடையற்ற பாதைக்கான அணுகலை தடைசெய்வதன் மூலம் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய வகையில் தனிநபர் அல்லது குறிப்பிட்ட குழுவினரை இலக்கிடுவது
  • வாக்காளர் அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு இடையூறு, இதிலடங்குபவை:
    • அதிகாரப்பூர்வக் கருத்துக்கணிப்பில் அல்லது தேர்தலில் பங்கேற்கும் ஒரு தனிநபரின் திறனைப் பாதிக்கும் வகையில் ஒன்றிணைந்த இடையூறை ஏற்படுத்த அழைத்தல்.
    • கணக்கெடுப்பிலோ வாக்களிப்பிலோ பங்கேற்பது சட்ட அமலாக்க விளைவுகளுக்கு (உதாரணமாக, கைது செய்தல், வெளியேற்றுதல் அல்லது சிறைப் பிடித்தல்) வழிவகுக்கக்கூடும் அல்லது வழிவகுக்கும் எனக் கூறும் கூற்றுகள்.
    • வாக்காளர்கள் அல்லது தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவோ பார்க்கவோ தேர்தல் நடக்கும் இடத்திற்கு செல்வதாக அச்சுறுத்துவது (அச்சுறுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தும் சூழலில். உதாரணமாக, “அவர்களுக்கு நாம யாருன்னு காட்டுவோம்”, “சண்டை போடணுமா அவுங்களுக்கு? சண்டை அப்படின்னா என்னான்னு காட்டுவோம்”).
    • தேர்தலுக்குப் பிறகான செயல்முறைகள் நடைபெறும் இடத்திற்கு செல்வதாக அச்சுறுத்துவது (அச்சுறுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தும் சூழலில். உதாரணமாக, “அவர்களுக்கு நாம யாருன்னு காட்டுவோம்”, “சண்டை போடணுமா அவுங்களுக்கு? சண்டை அப்படின்னா என்னான்னு காட்டுவோம்”).
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
ஒருங்கிணைந்து தீங்கு செய்தல் மற்றும் குற்றத்தை ஊக்குவித்தல் தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்