குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல்
குழந்தைகளைப் பாலியல் ரீதியாக அச்சுறுத்தும், சித்தரிக்கும், புகழும், ஆதரிக்கும், அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கும், நோக்கத்திற்கான அறிக்கைகளை உருவாக்கும், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலில் பங்கேற்பதை ஒப்புக்கொள்ளும் அல்லது அது தொடர்பான இணைப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் பதிவுச் செயல்பாடு அல்லது ஊடாடல்கள். இவற்றில் உண்மையான குறைந்த வயதுடையவர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள், கைக்குழந்தைகள் அல்லது மனித உருவம் கொண்ட உண்மையாக இல்லாத சித்தரிப்புகள் (கலை, AI உருவாக்கிய பதிவு, கற்பனைக் கதாப்பாத்திரங்கள், பொம்மைகள் போன்றவை) அடங்கும். இதில் பின்வருபவை அடங்கும், ஆனால் அவை மட்டுமே அல்ல:
பாலியல் உடலுறவு
வெளிப்படையான உடலுறவு அல்லது வாய்வழி உடலுறவு என்பது வாய் அல்லது பிறப்புறுப்பு மற்றொரு நபரின் பிறப்புறுப்புடன் அல்லது ஆசனவாயுடன் உறவு கொள்வது அல்லது நுழைவது, இதில் ஒரு நபரின் பிறப்புறுப்பு அல்லது மலவாய் தெரியும்படி இருப்பது என வரையறுக்கப்படுகிறது.
மறைமுகமான பாலியல் உடலுறவு அல்லது வாய்வழி உடலுறவு, நெருக்கமான தொடர்பிலோ மறைமுகமாகக் காட்டுவதோ இதில் அடங்கும்.
பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாயின் உணர்ச்சித் தூண்டல், நெருக்கமான தொடர்பிலோ மறைமுகமாகக் காட்டுவதோ இதில் அடங்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விலங்கு சம்பந்தப்பட்டது.
பாலியல் கூறுகள் கொண்ட குழந்தைகள், ஆனால் இவை மட்டும் அல்ல:
விருப்பமின்றிக் கட்டுப்படுத்துதல்
உணர்வைத் தூண்டும் அறிகுறிகள்
பிறப்புறுப்புகள் அல்லது மலவாயில் கவனம் செலுத்ததல்.
பாலியல் உணர்வு தூண்டப்பட்ட வயதுவந்தோர்
பாலியல் பொம்மைகள் இருப்பது அல்லது பாலியல் தூண்டுதலுக்காக அல்லது திருப்திக்காக ஏதேனும் ஒரு பொருளைப் பயன்படுத்துதல் அல்லது பாலியல் வன்கொடுமை
பாலியல் நோக்கத்துடன் கூடிய ஆடை
துணி களைதல்
அரங்கேற்றப்பட்ட சூழல் (உதாரணமாக, ஒரு படுக்கையில்) அல்லது தொழில்முறை ஷாட் (தரம்/ஃபோகஸ்/கோணங்கள்).
வாய் முத்தம்
முலைக்காம்புகளைத் தூண்டுதல் அல்லது பெண்களின் மார்பகங்களைப் பிழிதல் (பால் கொடுக்கும் சூழல் தவிர்த்து)
பாலியல் செயல்பாட்டிற்கான துணைத் தயாரிப்புகள் இருத்தல்
பாலியல் இச்சையைத் தூண்டும் சூழலில் குழந்தைகளை ஈடுபடுத்தும் பதிவு
சுகாதாரச் சூழலில் நடுநிலையாக விவாதிக்கப்படாவிட்டால், பெடோபிலியாவில் பங்கேற்பதை ஆதரிக்கும், விளம்பரம் செய்யும், வாதாடும் அல்லது ஊக்குவிக்கும் பதிவு.
பெயர் அல்லது படத்தின் மூலம் குழந்தை பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கூறப்படும் நபர்களை அடையாளப்படுத்தும் அல்லது கேலி செய்யும் பதிவு
பாலியல் கோரிக்கை
குழந்தைகளைச் சித்தரிக்கும் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் பதிவு அல்லது செயல்பாட்டைக் கேட்கும் பதிவு, இவ்வாறு வரையறுக்கப்படுகிறது:
குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான பதிவு (CSAM)
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட குழந்தைகளின் நிர்வாணப் படங்கள்
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட பிள்ளைகளின் பாலியல் படங்கள்
குழந்தைகளுடன் தகாத உரையாடல்கள்
பின்வருபவை உட்பட குழந்தைகளுடன் தகாத உரையாடல்களை உருவாக்கும் அல்லது ஆதரிக்கும் பகிர்வு:
குழந்தைகளுடன் பாலியல் செயல்களைக் கேட்டல், ஏற்பாடு செய்தல் அல்லது திட்டமிடல்
பாலியல் உரையாடல்கள் மூலம் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடக் குழந்தைகளைத் தூண்டுதல் அல்லது உள்நோக்கத்துடன் வெளிப்படுத்துவது மூலம் அல்லது தனிப்பட்ட மெசேஜ்கள் மூலம் குழந்தைகளுக்கு அல்லது அவர்களிடம் இருந்து பாலியல் மெட்டீரியலை வழங்குதல், காட்டுதல், பெறுதல் அல்லது கேட்டல்
குழந்தைகளுடன் தனிப்பட்ட மெசேஜ்களில் மறைமுகமாகப் பாலியல் உரையாடல்களில் ஈடுபடுதல்
தனிப்பட்ட மெசேஜ்களில் குழந்தைகளிடமிருந்து பாலியல் விஷயங்களைப் பெறுதல் அல்லது கேட்டல்
தவறாகப் பயன்படுத்தப்படும் நெருக்கமான படங்கள் மற்றும் பாலியல் ரீதியான செயல்கள்
இதன் மூலம் நிஜமான குழந்தைகளைப் துன்புறுத்த முயற்சிக்கும் பதிவு:
அவர்களின் நெருக்கமான படம் அல்லது அந்தரங்கத் தகவலை அம்பலப்படுத்துவதாக அச்சுறுத்திக் கட்டாயப்படுத்தி பணம், உதவிகள் அல்லது அவர்களின் நெருக்கமான படத்தைப் பெறுவது
தனிப்பட்ட பாலியல் உரையாடல்கள் அல்லது நெருக்கமான படங்களைப் பகிர்வதற்கான நோக்கத்தைப் பகிர்தல், அச்சுறுத்தல் அல்லது கூறுதல்
குழந்தைகளைப் பாலியல் ரீதியாகக் காண்பித்தல்
இது நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட குழந்தைகளைப் பாலியல் ரீதியான சூழலில் காட்டும் பதிவு (படங்கள், வீடியோக்கள், நிஜ உலகக் கலை, டிஜிட்டல் பதிவு மற்றும் வாய்மொழி சித்தரிப்புகள் அடங்கும்)
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட குழந்தைகளைப் பாலியல் ரீதியான சூழலில் காட்டும் குழுக்கள், பக்கங்கள் மற்றும் சுயவிவரங்கள்
குழந்தை நிர்வாணம்
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட குழந்தைகளின் நிர்வாணத்தைச் சித்தரிக்கும் பதிவு, நிர்வாணம் இவ்வாறாக வரையறுக்கப்படுகிறது:
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட குழந்தைகளுடைய பிறப்புறுப்பின் நெருக்கமான காட்சிகள்
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட சின்னஞ்சிறு நிர்வாணமான குழந்தைகள் இவ்வாறு காட்டப்படுதல்:
மறைக்கப்பட்டாலும் அல்லது வெளிப்படையான ஆடைகளால் மூடப்பட்டிருந்தாலும் கூட பிறப்புறுப்பு தெரிதல்.
ஆசனவாய் தெரிதல் மற்றும்/அல்லது பிட்டங்களின் முழு நிர்வாண நெருக்கமான காட்சி.
நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட நிர்வாணமான குறைந்த வயதுடையவர்கள் இவ்வாறு காட்டப்படுதல்:
பிறப்புறுப்பு காட்டப்படுதல் (அந்தரங்க முடி அல்லது வெளிப்படையான ஆடைகளால் மட்டுமே மறைக்கப்பட்ட பிறப்புறுப்பு உட்பட)
ஆசனவாய் தெரிதல் மற்றும்/அல்லது பிட்டங்களின் முழு நிர்வாண நெருக்கமான காட்சி.
பெண் முலைக்காம்புகளை வெளிப்படுத்துவது
பிறப்புறுப்பு அல்லது பெண் முலைக்காம்புகள் எதுவும் தெரியாவிட்டாலும் கூட, கழுத்து முதல் முழங்கால் வரை உடைகள் இல்லாமல் இருத்தல்
சித்தரிக்கப்பட்ட படங்கள் உடல்நல நோக்கங்களுக்கானவை என்றாலோ குழந்தை நிர்வாணம் நிஜ உலக கலைப்படைப்பில் சித்தரிக்கப்பட்டிருந்தாலோ அவற்றுக்கு விலக்கு உண்டு
குழந்தைகள் மீதான பாலியல் சாராத துன்புறுத்தல்
நிஜ உலகக் கலைப்படைப்பு, கார்ட்டூன்கள், திரைப்படங்கள் அல்லது வீடியோ கேம்களில் இருந்து பெறப்பட்ட படங்களாக இல்லாத பட்சத்தில், பகிர்வு நோக்கத்தைப் பொருட்படுத்தாமல் நிஜமான அல்லது சித்தரிக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் சாராத துன்புறுத்தலைச் சித்தரிக்கும் வீடியோக்கள் அல்லது படங்கள்
குழந்தைகள் மீதான பாலியல் சாராத துன்புறுத்தலில் பங்கேற்பதைப் பாராட்டும், ஆதரிக்கும், ஊக்குவிக்கும், ஆதரித்துப் பேசும், பங்கேற்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கும் அல்லது பங்கேற்பதை ஊக்குவிக்கும் பகிர்வுகள்