நம்பகமான அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்

கொள்கை விவரம்

பதிவை மாற்றவும்
நியாயமான கொள்கை
நம்பகத்தன்மை என்பது நமது சமூகத்தின் அடிப்படையாகும். நம்பகத்தன்மை அர்த்தமுள்ள வழிகளில் மக்கள் ஒருவருக்கொருவரும் Metaவுக்கும் பொறுப்பேற்க வேண்டிய ஒரு சமூகத்தை உருவாக்க உதவுகிறது என்று நம்புகிறோம். ஆள்மாறாட்டம் மற்றும் அடையாளத்தை தவறாக சித்தரிப்பதைத் தடுப்பதில், நமது உலகளாவிய சமூகத்தில் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகளை நாங்கள் அனுமதிக்க விரும்புகிறோம். பயனர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து சமூகத்தைக் கட்டமைக்கக்கூடிய பாதுகாப்பான கட்டற்றச் சூழலைப் பராமரிக்க, மற்றவர்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் கணக்குகள் அல்லது சுயவிவரங்களை உருவாக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.
Facebook இல், பயனர்கள் தங்கள் உண்மையான அடையாளத்தைக் குறிக்கும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்தும் பெயரைப் பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். தங்கள் ஆர்வங்கள் அல்லது வணிகங்கள் போன்ற தங்கள் அடையாளத்தின் வெவ்வேறு பகுதிகளைப் பயனர்கள் வெளிப்படுத்துவதற்கு உதவும் வகையில் அவர்களுக்குக் கூடுதல் சுயவிவரங்களை உருவாக்கினோம்.
Facebook, Instagram மற்றும் Threads கணக்குகளோ பிற Facebook அமைப்புகளோ (பக்கங்கள், குழுக்கள் போன்றவை) பின்வருமாறு இருந்தால் எங்கள் சேவைகளின் பயன்பாட்டை அனுமதிக்க மாட்டோம் மற்றும் அவற்றுக்குக் கட்டுப்பாடு விதிப்போம்/முடக்குவோம்:
  • சிறாருக்குச் சொந்தமாக இருத்தல்
  • வேறொரு நபர் அல்லது அமைப்பைப் பின்வருவதுபோல் ஆள்மாறாட்டம் செய்தல்:
    • மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அவர்களது படம் (படங்கள்), பெயர் அல்லது விருப்பங்களைப் பயன்படுத்துவது
    • வேறொருவரின் அல்லது அமைப்பின் சார்பாக அவரது அங்கீகாரமில்லாமல் பேசுவது (எ.கா. பக்கம் அல்லது சுயவிவரத்தை உருவாக்குதல்)
  • மற்றவர்களைத் தவறாக வழிநடத்த அல்லது ஏமாற்ற, செயலாக்கத்தைத் தவிர்க்க அல்லது எங்கள் சமூகத் தரநிலைகளை விதிமீற அடையாளத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஈடுபடுதல். தவறாக வழிநடத்த அடையாளத்தைத் தவறாக வழங்கும்போது பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறோம், அவை:
    • பெயர் அல்லது வயது போன்ற அடையாள விவரங்களுக்கான தொடர்ச்சியான அல்லது முக்கியமான மாற்றங்கள்
    • சுயகுறிப்பு விவரங்கள் மற்றும் சுயவிவர இருப்பிடம் போன்ற தவறாக வழிநடத்தும் தகவல்கள்
    • மூலப் படங்களைப் பயன்படுத்துதல்
  • எங்கள் சமூகத் தரநிலைகளை மீறும் அம்சங்களை கொண்ட பெயரைப் பயன்படுத்துதல்.
Facebook இல், பின்வருமாறு இருந்தால் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவது முதல் நிரந்தரமாக முடக்குவது வரையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் மேற்கொண்டு தகவல்களைக் கோருவோம்:
  • தவறான பிறந்த தேதியை வழங்குதல்
  • உங்களுடைய உண்மையான பெயர் அல்லாமல் வேறு பெயரைப் பயன்படுத்துதல்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் குறிக்கவோ அவர்கள் பயன்படுத்தவோ ஒரே ஒரு கணக்கை உருவாக்குதல்
  • பல Facebook கணக்குகளை உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல்
  • வணிகம், செல்லப்பிராணி அல்லது கற்பனைக் கதாபாத்திரம் போன்ற மனிதர் அல்லாத ஒன்றைக் குறிக்கும் கணக்கை உருவாக்குதல்
  • நீண்டகாலமாக மாற்றமின்றி காலியான சுயவிவரங்களை வைத்திருப்பது
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
நம்பகமான அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் தொடர்பாக உதவி பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்