வயதுவந்தோர் நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்பாடு
கொள்கை விவரம்
பதிவை மாற்றவும்
இன்று
28 ஆக, 2025
26 ஜூன், 2025
14 மே, 2025
17 செப்., 2024
29 ஆக, 2024
25 ஜூலை, 2024
1 மே, 2024
29 பிப்., 2024
29 செப்., 2022
28 ஏப்., 2022
23 டிச., 2021
24 நவ., 2021
26 ஆக, 2021
19 நவ., 2020
20 மார்., 2019
15 அக்., 2018
27 ஜூலை, 2018
29 ஜூன், 2018
25 மே, 2018
நியாயமான கொள்கை
நிர்வாணம் அல்லது பாலியல் செயல்பாட்டைக் காட்டுவதைத் தடைசெய்கிறோம். ஏனெனில், எங்கள் சமூகத்தில் உள்ள சிலர் (குறிப்பாக, அவர்களின் கலாச்சாரப் பின்னணி/வயது காரணமாக) இந்த வகையான படைப்பிற்கு உணர்வுப்பூர்வமானவர்களாக இருக்கக்கூடும்.
எதிர்ப்புப் போராட்டமாக, நிகழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்விக்காக அல்லது மருத்துவக் காரணங்களுக்காக நிர்வாணம் பகிரப்படலாம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். பொருந்தும் இடங்களிலும், அத்தகைய நோக்கம் தெளிவாக இருக்கும் இடங்களிலும், படைப்பிற்கான அனுமதிகளை வழங்குகிறோம். உதாரணமாக, முலைக்காம்பு உட்பட பெண் மார்பகங்களின் சில படங்களை நாங்கள் தடைசெய்யும் அதே வேளையில், போராட்டம் சார்ந்த செயல்கள், பெண்கள் பாலூட்டுதலில் ஈடுபடல், மார்பக அகற்ற அறுவை சிகிச்சையின் தழும்புகளைக் காட்டும் படங்களை அனுமதிக்கிறோம் (சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்ற எச்சரிக்கைத் திரையுடனும் வயது கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் லேபிளிடப்பட்டிருக்கும்). ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவற்றின் படங்கள் போன்று நிர்வாணத்தைச் சித்தரிக்கும் நிஜ உலகக் கலைகளையும் அனுமதிக்கிறோம் (சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்ற எச்சரிக்கை திரையுடனும் & வயதுக் கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் லேபிளிடப்பட்டிருக்கும்). அனுமதியில்லாத அல்லது சிறார் இடம்பெறும் படைப்புகளைப் பகிர்வதைத் தடுக்க பாலியல் படங்களை இயல்பாகவே அகற்றிவிடுவோம்.
இந்தக் கொள்கைப்படி, நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்பாடு அடங்கிய நிஜப் படங்கள் மற்றும் வீடியோக்களை, AI அல்லது கணினியால் உருவாக்கப்பட்ட நிர்வாணம் அல்லது பாலியல் செயல்பாடு அடங்கிய படங்களை, டிஜிட்டல் படத்தொகுப்புகளை அவை "நிஜம் போன்ற படங்களாக" (நிஜ நபர் போல் இருந்தாலும்) தோன்றினாலும் அகற்றுகிறோம். மேலே குறிப்பிட்டுள்ளபடி, நிஜ உலகக் கலைகள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ, கல்வி சார்ந்த, மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படைப்புகளுக்கு அக்கறையுடன் அனுமதியளிக்கிறோம், இவை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.
குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல், வன்கொடுமை மற்றும் நிர்வாணம் தொடர்பான எங்கள் சமூகத் தரநிலையில் குழந்தை நிர்வாணம் தொடர்பான பகிர்வு பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பின்வரும் பகிர்வுகளைச் சில பயனர்களுக்கு நாங்கள் அனுமதிப்பதில்லை:
வயதுவந்தோர் நிர்வாணம்
- வயதுவந்தோர் நிர்வாணத்தின் தத்ரூபமான படங்கள் மற்றும் டிஜிட்டல் படங்கள், அவற்றில் இவை சித்தரிக்கப்பட்டிருந்தால்:
- பிறப்புறுப்பு தெரிதல் (அந்தரங்க முடி அல்லது டிஜிட்டல் ஓவர்லேக்களால் மறைக்கப்பட்டிருத்தல் உட்பட)
- ஆசனவாய் தெரிதல் மற்றும்/அல்லது தெரியும்படியான பிட்டங்களின் நெருக்கமான காட்சி
- தாய்ப்பால் கொடுத்தல் அல்லது போராட்டத்தில் ஈடுபடும் சூழலைத் தவிர, வேறு சூழல்களில் பெண் முலைக்காம்புகள் தெரிதல்
- தத்ரூபமான/டிஜிட்டல் வீடியோக்களில் காட்டப்படுகின்ற நபர்களுக்குத் தெரியாமலேயே கவட்டை, பெண் மார்பகங்கள் அல்லது பிட்டங்களை மையமாகக் கொண்டு பதிவுசெய்தல்
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழல்கள் போன்ற கூடுதல் சிறப்புச் சூழல்களில் வயது வந்தோருக்கான நிர்வாணச் சித்தரிப்புகளைச் சில கட்டுப்பாடுகளுடன் நாங்கள் அனுமதிக்கலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இது கீழே உள்ள பிரிவுகளில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
வயது வந்தோருக்கான பாலியல் செயல்பாடு
- பின்வருபவை உட்பட வயது வந்தோருக்கான பாலியல் செயல்பாட்டின் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள்:
- வெளிப்படையான பாலியல் செயல்பாடு அல்லது தூண்டல்:
- வெளிப்படையான உடலுறவு அல்லது வாய்வழி உடலுறவு என்பது ஒருவரின் வாய் அல்லது பிறப்புறுப்புகள் மற்றொரு நபரின் பிறப்புறுப்புகளுடன் அல்லது ஆசனவாயுடன் உறவுகொள்வது அல்லது நுழைவது அல்லது பாலியல் பொம்மையின் மீது பிறப்புறுப்புகளை வைப்பது அல்லது செருகுவது, இதில் ஒரு நபரின் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய் தெரியும்படி இருப்பது எனக் குறிப்பிடப்படுகிறது
- தூண்டல் என்பது ஒருவரின் பிறப்புறப்புகள் அல்லது ஆசனவாயை வெளிப்படையாகத் தூண்டுதல் அல்லது ஒருவரின் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாயில் பாலியல் பொம்மைகளை உள்ளே செலுத்துதல். இதில் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய் நேரடியாகத் தெரியக்கூடியதாக இருக்கும்
- மறைமுகமான பாலியல் செயல்பாடு அல்லது தூண்டல்:
- மறைமுகமான உடலுறவு அல்லது வாய்வழி உடலுறவு என்பது ஒருவரின் வாய் அல்லது பிறப்புறுப்புகள் மற்றொரு நபரின் பிறப்புறுப்புகளுடன் அல்லது ஆசனவாயுடன் உறவுகொள்வது அல்லது நுழைவது, இதில் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய் மற்றும்/அல்லது அவை உறவுகொள்வது அல்லது நுழைவது வெளிப்படையாகக் காட்டப்படாது
- தூண்டல் என்பது ஒருவரின் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாயின் மறைமுகமான தூண்டல் அல்லது ஒருவரின் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாயின் மேலே அல்லது உள்ளே பாலியல் பொம்மைகளைப் பயன்படுத்துவது அல்லது பாலியல் பொம்மையின் மீது பிறப்புறுப்புகளை வைப்பது அல்லது செருகுவதாகும். இதில் பிறப்புறுப்புகள் அல்லது ஆசனவாய், தூண்டல், பயன்படுத்துதல் மற்றும்/அல்லது செருகுதுதல் வெளிப்படையாகக் காட்டப்படாது
- ஒரு நபரின் கை, வாய் அல்லது பிறப்புறுப்புகளுக்கும் மற்றொரு நபரின் பிறப்புறுப்பு அல்லது ஆசனவாய்க்கும் இடையே தொடர்பு ஏற்படப் போகிறது என்பதைத் தெரிவிக்கும் போஸ்கள் மூலம் பாலியல் செயல்பாடு நிகழப்போவதைக் குறிப்பிடுதல்.
- பிற பாலியல் செயல்பாடு அல்லது தூண்டல்:
- விறைப்பு
- பாலியல் செயல்பாட்டிற்கான துணைத் தயாரிப்புகள் இருத்தல்
- பாலியல் பொம்மைகளை வாயில் வைத்திருத்தல் அல்லது செருகுதல்
- ஆடையில்லாம் தெரியும் மனித முலைக்காம்புகளைத் தூண்டுதல்
- பெண் மார்பகங்களை அழுத்துவது என்பது வளைந்த விரல்களால் பிடுங்கும் செயல் என வரையறுக்கப்படுகிறது, இது மார்பகங்களின் அடையாளங்கள் மற்றும் தெளிவான வடிவ மாற்றத்தைக் காட்டும். தாய்ப்பால் கொடுக்கும் சூழல்களில் அழுத்துவதை நாங்கள் அனுமதிக்கிறோம்.
- பின்வருபவை சம்பந்தப்பட்ட பாலியல் இச்சையைத் தூண்டுவதைச் சித்தரிக்கும் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள் அல்லது நிஜ உலக கலை:
- ஒருவரின் அல்லது விலங்கின் மரணத்திற்கு வழிவகுக்கும் செயல்கள்
- துண்டாக்குதல்
- நரமாமிசம்
- மலம், சிறுநீர், துப்புதல், சளி, மாதவிடாய் அல்லது வாந்தி
- மிருகத்துடன் உடலுறவு கொள்ளுதல்
- முறையற்ற உடலுறவு
- BDSM (கொத்தடிமைத்தனம் மற்றும் அடக்கம், ஆதிக்கம் மற்றும் அடிபணிதல், துன்பத்தில் இன்பம் காணுதல் மற்றும் வலியில் சுகம் காணல்), பாலியல் குறிகாட்டிகள் இருக்கும்போது மட்டுமே
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழலில் வெளிப்படையான பாலியல் செயல்பாடு அல்லது தூண்டலின் தத்ரூபமான படங்கள்
- பாலியல் செயல்பாட்டின் நீண்ட ஆடியோ
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழல்கள் போன்ற சிறப்புச் சூழல்களில் பாலியல் செயல்பாடுகளின் சித்தரிப்புகளைச் சில கட்டுப்பாடுகளுடன் நாங்கள் அனுமதிக்கலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இது கீழே உள்ள பிரிவுகளில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் பகிர்வை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாட்டை விதித்துள்ளோம், மேலும் பகிர்வு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதை மக்கள் அறிந்துகொள்ள ஒரு லேபிளையும் சேர்த்துள்ளோம்:
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழலில் வெளிப்படையான பாலியல் செயல்பாடு அல்லது தூண்டலின் டிஜிட்டல் படங்கள் மற்றும் நிஜ உலகக் கலை
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழலில் மறைமுகமான அல்லது பிற பாலியல் செயல்பாடு அல்லது தூண்டலின் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள் மற்றும் நிஜ உலக ஓவியம்
- பிறப்புறுப்புகள், ஆசனவாய் தெரியும் தத்ரூபமான/டிஜிட்டல் படம் மற்றும் நிஜ உலக ஓவியம், பாலினத்தை மாற்றும் அறுவைசிகிச்சையில் பிட்டம் அல்லது பெண் முலைக்காம்புகள் தெரியும் நெருக்கமான படம்
- பிறப்புறுப்புகள் தெரியும் நிஜ உலக ஓவியம் (டிஜிட்டல் ஓவர்லே அல்லது மறைப்பால் மூடப்பட்ட பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்க முடியால் மட்டுமே மறைக்கப்பட்ட பிறப்புறுப்பு உட்பட), ஆசனவாய் தெரிதல், பிட்டம் அல்லது பெண் முலைக்காம்புகள் தெரிவதன் நெருக்கமான காட்சிகள், இதில் நிர்வாணம் படத்தின் மையமாக உள்ளது, மருத்துவம் அல்லது உடல்நலச் சூழலில் அல்லாமல் இருப்பது
- பஞ்சம், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற சூழலில் பகிரப்படும், பிறப்புறுப்புகள் தெரியும் தத்ரூபமான/டிஜிட்டல் வீடியோக்கள் (டிஜிட்டல் ஓவர்லே அல்லது மறைப்பால் மூடப்பட்ட பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்க முடியால் மறைக்கப்பட்ட பிறப்புறுப்பு உட்பட), பிட்டம், ஆசனவாய் அல்லது பெண் முலைக்காம்புகள் தெரிவதன் நெருக்கமான காட்சிகள்
பின்வரும் பகிர்வைப் பெரியவர்கள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் கட்டுப்பாட்டை விதித்துள்ளோம்:
- டிஜிட்டல் முறையில் மேலே மறைப்பது அல்லது ஒளிபுகாப் பொருளினால் மறைப்பது ஆகியவற்றின் மூலம் மட்டுமே நிர்வாணத்தை மறைப்பது மற்றும் சில சூழல்களில் வெளிப்படையாகத் தெரியும் உடையின் மூலம் நிர்வாணத்தைத் தெளிவில்லாமல் காட்டுவது போன்ற கிட்டத்தட்ட நிர்வாணத்தைச் சித்தரிக்கும் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள்
- கவட்டை, பிட்டம் அல்லது பெண் மார்பகம்(கள்) மையமாக இருக்கும் படத்தில் உள்ள நபர்களின் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள்
- உடல் வடிவங்கள் அல்லது அமைப்புகள் மட்டுமே தெரியும் வகையில் உள்ள வெளிப்படையான, மறைமுகமான அல்லது பிற பாலியல் செயல்பாடு அல்லது தூண்டுதலின் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள் மற்றும் நிஜ உலகக் கலை
- நிஜ உலகப் படம், அதாவது
- மருத்துவம் அல்லது உடல்நலம் தொடர்பான சூழலில் பதிவிடுவது தவிர்த்து மற்ற சூழல்களில் மறைமுகமான, வெளிப்படையான அல்லது பிற பாலியல் செயல்பாடு அல்லது தூண்டுதலைச் சித்தரிக்கும் படங்கள்
- நடுத்தரமாகவும், கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் பகிரப்படும், உண்மையான மக்களையோ விலங்குகளையோ சித்தரிக்காதவை எனும் பட்சத்தில் விலங்குகளுடனான உடலுறவைச் சித்தரிக்கும் படம்.
- மறைமுகமான அல்லது பிற பாலியல் செயல்பாடு அல்லது தூண்டுதலைச் சித்தரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட கற்பனையான தத்ரூபமான படங்கள்
- இவற்றைச் சித்தரிக்கும் தத்ரூபமான/டிஜிட்டல் படங்கள் மற்றும் நிஜ உலகக் கலை:
- நாக்கு தெரியும்படி முத்தமிடுதல் மற்றும் பாலியல் அல்லது காம நடனம் போன்ற பாலியல் தொடர்பான செயல்பாடுகள்
- பாலியல் செயல்பாட்டை உருவகப்படுத்தும் நபர்கள்
- பிறப்புறுப்பு, சுயஇன்பம், வாய்வழி உறவு அல்லது உடலுறவைக் குறிக்கும் சைகைகள்
- தெரிந்த ஆபாச வலைதளங்களின் லோகோக்கள், ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது வீடியோ கிளிப்கள்
- பாலியல் செயல்பாடு குறித்த ஆடியோ உள்ள படைப்புகள்
பின்வரும் பகிர்வுக்கு, பகிர்வு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை லேபிளைப் பயனர்களுக்குக் காட்டுவோம்:
- இவற்றைச் சித்தரிக்கும் தத்ரூபமான/ டிஜிட்டல் படங்கள் மற்றும் நிஜ உலகக் கலை:
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழலில் பகிரப்படும், பிறப்புறுப்புகள் தெரிதல் (டிஜிட்டல் ஓவர்லே அல்லது மறைப்பால் மூடப்பட்ட பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்க முடியால் மறைக்கப்பட்ட பிறப்புறுப்பு உட்பட), பிட்டம் அல்லது ஆசனவாய் தெரிவதன் நெருக்கமான காட்சிகள் இதில் அடங்குபவற்றுக்கான உதாரணங்கள்:
- குழந்தைப் பிறப்பு மற்றும் பிறப்புக்குப் பிறகான தருணங்கள்
- புற்றுநோய் அல்லது பிற நோய்க்கான சுய பரிசோதனை
- மருத்துவம் அல்லது உடல்நலச் சூழலில் பகிரப்படும் (முலையழற்சி அல்லது புற்றுநோயிலிருந்து மீண்டதைக் குறிக்கும் டாட்டூக்கள் உட்பட) பெண்ணின் முலைக்காம்புகள் தெரிதல்
பின்வரும் சமூகத் தரநிலைகளுக்கு, பின்வருபவற்றை அமல்படுத்த கூடுதல் தகவல்கள் மற்றும்/அல்லது சூழல் எங்களுக்கு வேண்டும்:
- சில சூழல்களில், சமூகத் தரநிலைகளை மீறக்கூடிய பகிர்வுகள் நையாண்டித்தனமானவை என்று தீர்மானிக்கப்படும்போதும், அவை 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களுக்கானது என்ற லேபிளுடன் இருக்கும்போதும் அவற்றை நாங்கள் அனுமதிப்போம். குறிப்பிட்ட ஒன்றை அல்லது குறிப்பிட்ட ஒருவரை நையாண்டித்தனமாகவோ கேலியாகவோ விமர்சிக்கும் விதமாகவோ இருந்தால் மட்டுமே படைப்பின் விதிமீறும் அம்சங்கள் அனுமதிக்கப்படும்.
பயனர் அனுபவங்கள்
Facebook இல் உள்ளவர்களுக்குப் பின்வருபவை போன்ற விதிமீறல் அமலாக்கம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்: Facebook இல் இருக்கக்கூடாது என நீங்கள் கருதுவதைப் புகாரளிப்பது, எங்களது சமூகத் தரநிலைகளை நீங்கள் மீறியுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பது மற்றும் சில பகிர்வுகள் மீது எச்சரிக்கை திரையைப் பார்ப்பது எப்படிக் காட்சியளிக்கும் போன்றவை.
கவனத்திற்கு: நாங்கள் எப்போதும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறாம். எனவே, இங்கு நீங்கள் பார்ப்பது, நாங்கள் தற்போது பயன்படுத்துவதைக் காட்டிலும் சற்று பழையதாக இருக்கக்கூடும்.
பயனர் அனுபவம்
புகாரளித்தல்
பயனர் அனுபவம்
புகாருக்குப் பின்னரான தகவல்தொடர்பு
பயனர் அனுபவம்
அகற்றுதல் அனுபவம்
பயனர் அனுபவம்
எச்சரிக்கை திரைகள்
தகவல்
சமீபத்திய சமூகத் தரநிலைகள் அமலாக்க அறிக்கையைக் காண்க
செயலாக்கம்
Facebook இல் உள்ள அனைவருக்கும் உலகம் முழுவதும் ஒரே கொள்கைகளையே கொண்டுள்ளோம்.
மதிப்பாய்வுக் குழுக்கள்
Facebook இல் உள்ளவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்களது உலகளாவியக் குழுவில் உள்ள 15,000க்கும் அதிகமான மதிப்பாய்வாளர்கள் தினமும் பணியாற்றுகின்றனர்.
பங்குதாரர் ஈடுபாடு
வெளிநிறுவன நிபுணர்கள், கல்வியாளர்கள், NGOக்கள் மற்றும் கொள்கை உருவாக்குநர்கள் Facebook சமூகத் தரநிலைகளைத் தெரிவிப்பதற்கு உதவுகின்றனர்.
வயது வந்தோர் நிர்வாணம் மற்றும் பாலியல் செயல்பாடு தொடர்பான உதவியைப் பெறுங்கள்
எங்கள் சமூகத் தரநிலைகளுக்கு எதிராக இருக்கும் எதையேனும் Facebook இல் நீங்கள் பார்த்தால் நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அறியுங்கள்.
எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்