சமூகத் தரநிலைகள்
அறிமுகம்
பயனர்களின் கருத்துகள் மற்றும் தொழில்நுட்பம், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் வல்லுநர்களாக உள்ளவர்களின் அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தரநிலைகள் அமைந்துள்ளன. அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த, வெவ்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் நம்பிக்கைகளை உள்ளடக்கிய, அதிலும் குறிப்பாக கவனிக்கப்படாத அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகங்களின் கருத்துகளையும் சேர்த்து தரநிலைகளை உருவாக்குவதில் மிகுந்த கவனமுடன் செயல்படுகிறோம்.
ஒவ்வொரு நாளும் பயனர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிரவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும், சமூகங்களை உருவாக்கவும் Facebook, Instagram, Messenger மற்றும் Threadsஐப் பயன்படுத்துகிறார்கள். நாடுகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி, பல்வேறு மொழிகளில் கோடிக்கணக்கானவர்கள் தங்களின் எண்ணங்களைத் தயங்கமின்றித் தெரிவிப்பதற்கு எங்கள் சேவைகள் உதவுகின்றன.
தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு முழு அதிகாரமும் பெற்ற இடமாக Facebook, Instagram, Messenger மற்றும் Threads இருக்கின்றன என்று பயனர்கள் எண்ணுவதன் முக்கியத்துவத்தை Meta அறிந்துள்ளது. மேலும் எங்களது சேவையில் எந்தவிதத் தவறுகளும் நிகழாத வகையில் வைத்துக்கொள்வதற்கு தீவிரமாக பணியாற்றுகிறோம். இதற்காகவே இந்தச் சேவைகளில் அனுமதிக்கப்படுபவை மற்றும் அனுமதிக்கப்படாதவை எவை என்பதை விவரிக்க தரநிலைகளை உருவாக்கியுள்ளோம்.
சமூகத் தரநிலைகளின் ஆங்கிலப் பதிப்பில் மிகவும் சமீபத்திய கொள்கைகளின் தொகுப்பு இருக்கும் என்பதையும் அதையே முதன்மை ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.
கருத்து தெரிவிப்பதற்கான எங்களின் பொறுப்பு
எங்கள் சமூகத் தரநிலைகளின் இலக்கு என்பது கருத்துகளை வெளிப்படுத்துகின்ற இடத்தை உருவாக்குவதும் பயனர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த வைப்பதுமாகும். எழுத்து வடிவிலான கருத்துகள், படங்கள், இசை அல்லது பிற கலை வடிவங்களின் மூலமாக மக்கள் அவர்களுக்கு முக்கியமானதாகக் கருதும் பிரச்சினைகளை அவற்றில் சில ஏற்கத்தக்கதாக இல்லாவிட்டாலும் அல்லது ஆட்சேபனை தெரிவிக்கக்கூடியதாக இருந்தாலும்கூட அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டுமென Meta விரும்புகிறது. சில சூழல்களில், எங்கள் தரநிலைகளை மீறும் உள்ளடக்கம் எனினும் அது சுவாரஸ்யமானது மற்றும் பொது நலனுக்கானது என்றால் அனுமதிக்கிறோம். தீங்கு விளைவிக்கும் அபாயத்துடன் பொது நலனுக்கான மதிப்பை ஒப்பிட்ட பின்னரே இதனைச் செய்கிறோம், இந்த முடிவுகளை எடுப்பதற்காகச் சர்வதேச மனித உரிமைகளுக்கான தரநிலைகளைக் கருத்தில்கொள்கிறோம். வேறுவிதமாக கூறினால், கூடுதல் தகவல்களானது உள்ளடக்கம் எங்கள் தரநிலைகளுக்கு எதிராக இருப்பதாக முறையாகப் புரிந்துகொள்ள அனுமதிக்கும்போது, தெளிவற்ற அர்த்தமுடைய அல்லது மறைமுகமான மொழியைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றக்கூடும்.
கருத்து தெரிவிப்பதற்கான எங்களின் பொறுப்பு என்பது மிகவும் முதன்மையானது. ஆனால் இணையம் தவறான உபயோகத்திற்கான புதிய மற்றும் அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை அறிகிறோம். இந்தக் காரணங்களுக்காக கருத்து தெரிவிப்பதை நாங்கள் வரம்பிடும்போது, பின்வரும் மதிப்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட சேவைகளில் பயன்படுத்துகிறோம்:
நம்பகத்தன்மை
பயனர்கள் பார்க்கும் பகிர்வுகள் நம்பகமானவை என்பதை நாங்கள் உறுதிபடுத்த விரும்புகிறோம். நம்பகத்தன்மையானது பகிர்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குகிறது என்பதை நம்புகிறோம். அதனால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் யார் என்பதையும் அல்லது என்ன செய்கிறார்கள் என்பதையும் தவறாகச் சித்தரிக்க வேண்டாமென விரும்புகிறோம்.
பாதுகாப்பு
Facebook, Instagram, Messenger மற்றும் Threadsஸைப் பாதுகாப்பான இடமாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம். நபர்களை உடல் ரீதியாகப் பாதிக்கும் ஆபத்தை உண்டாக்கக்கூடிய பகிர்வுகளை அகற்றுகிறோம். பிறரை அச்சுறுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ, கருத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கவோ சாத்தியமுள்ள பயனர்களை அச்சுறுத்தும் பகிர்வுகள் Facebook இல் அனுமதிக்கப்படுவதில்லை.
தனியுரிமை
தனிப்பட்ட தனியுரிமையையும் தகவல்களையும் பாதுகாக்க பொறுப்பேற்றுள்ளோம். தனியுரிமையானது தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் எங்கள் சேவைகளில் எப்படி மற்றும் எப்போது பகிர வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் மேலும் எளிதாகத் தொடர்புகொள்ளவும் பயனர்களுக்குச் சுதந்திரத்தைத் தருகிறது.
கௌரவம்
கௌரவத்தையும் உரிமைகளும் அனைவருக்கும் சமமானவை என நினைக்கிறோம். பயனர்கள் பிறரின் கௌரவத்திற்கு மரியாதை அளித்து பிறரைத் துன்புறுத்தவோ அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கவோ கூடாது என எதிர்பார்க்கிறோம்.
சமூகத் தரநிலைகள்
எங்களின் சமூகத் தரநிலைகள் உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும், AI-உருவாக்கிய உள்ளடக்கம் உட்பட எல்லா வகையான உள்ளடக்கத்திற்கும் பொருந்தும்.
எங்கள் சமூகத் தரநிலைகளின் ஒவ்வொரு பகுதியும் கொள்கையின் நோக்கங்களை விளக்கும் “நியாயமான கொள்கையுடன்” தொடங்கும். அதைத் தொடர்ந்து பின்வருவதை விளக்கும் குறிப்பிட்ட கொள்கை இருக்கும்:
அனுமதிக்கப்படாத படைப்பு; மற்றும்
செயல்படுத்தக் கூடுதல் தகவல்களோ சூழல்களோ தேவைப்படும் பகிர்வுகள், எச்சரிக்கைத் திரையுடன் அனுமதிக்கப்படும் பகிர்வுகள் அல்லது 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் படைப்புகள்.